மேஷம்: இன்று உங்களுக்கான நேரத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதனால் சரியான வகையில் திட்டமிடவும். பணியிடத்தில் சிறிது ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். எனினும், மாலையில் நேரத்தை சந்தோஷமாகக் கழிப்பதற்காக கேண்டில் லைட் டின்னர், ரோஜா பூக்கள், இசை என பலவித ஏற்பாடுகளை செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்:புதிய வர்த்தக திட்டங்கள் தொடர்பாக, உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகக்கூடும். அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, காதலியுடன் விருந்திற்கு ஏற்பாடு செய்யவும்.
மிதுனம்:கோப உணர்வு மற்றும் விரோதப் போக்கின் காரணமாக பாதிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், பாதிப்பு ஏற்படும் என்றாலும் நீங்கள் செய்த தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உங்கள் பணியிடத்திலிருந்து நல்ல செய்தி காத்திருக்கிறது.
கடகம்:சரியான அணுகுமுறையின் காரணமாக, நீங்கள் மேற்கொண்ட செயல்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். இன்றைய நாளின் முடிவில், உங்கள் திறனையும் ஆளுமைப் பண்பையும் மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீடுகளிலும் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.
சிம்மம்:உங்களின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்களுக்கு இருக்கும் அதிக பொறுப்புகளின் காரணமாக, மற்றவர்கள் மீது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வர்த்தகத்தைப் பொறுத்தவரை, புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக முக்கிய பங்கு வகிப்பீர்கள்.
கன்னி:இன்று உங்கள் கலைத்திறன் வெளிப்படும். நீண்ட வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த உங்களது தனிப்பட்ட உடைமைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் முடிவில், புதிய மரசாமான்கள் மற்றும் கலைப் பொருட்களை கொண்டு உங்கள் வீட்டை அலங்காரம் செய்வீர்கள்.
துலாம்: இன்று சிறந்த நாளாக இருக்கும் என்பதால் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் ஈடுபாட்டுடன் பழகவும். சில பொருட்களை வாங்கும் வாய்ப்புள்ளது. மாலை வேளையில் உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுக்காக பொருட்களை வாங்க ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தைச் செலவழிப்பீர்கள்.
விருச்சிகம்:உங்களை மேம்படுத்திக் கொள்வது குறித்து சிந்திப்பீர்கள். வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செலவுகள் அதிகம் ஏற்படக்கூடும். இன்றைய நாளின் முடிவில், பணியிடத்திலும், குடும்பத்தினருடனும் நேரத்தை செலவழிப்பீர்கள்.
தனுசு:உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவதா அல்லது தொழில் பணியில் ஈடுபடுவதா என்ற குழப்பம் இருக்கும். இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து நடுநிலையுடன் செயல்படவும். உங்களது சாதிக்க வேண்டும் என்ற மனநிலையின் காரணமாக, பணி மூலம் உலகிற்கு உங்களை எடுத்துரைப்பீர்கள். இந்த நாளின் முடிவில் திறனையும், ஆற்றலையும் மேம்படுத்திக்கொண்டு சுதந்திரமான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள்.
மகரம்:இந்த உலகத்தில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைவிட நமக்கு ஆறுதலான விஷயம் எதுவும் இல்லை. இன்று உங்களுக்கு அது அதிகம் கிடைக்கும். குறிப்பாக வீட்டை அலங்கரிக்கும் விஷயங்களில் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களது ஆதரவுடன் இந்த உலகையே வெல்லலாம்.
கும்பம்:புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும். அங்கீகாரங்கள் மற்றும் பாராட்டுகள் தவிர, நீங்கள் மேலும் சிறந்து விளங்குவதற்கான ஊக்கமும் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள். ஆனால் நீங்கள் 100 சதவீதம் அளவிற்கு செயல் புரியவில்லை என்று உணர்வீர்கள். அதனால், நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
மீனம்:இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். சந்தோஷமான செய்தியின் காரணமாக உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மதிய நேரத்தில், முடிக்கப்படாமல் இருக்கும் பணிகள் முடிக்கப்படும் வாய்ப்புள்ளது. இன்று வர்த்தக நடவடிக்கை தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.