மேஷம்: இன்று, ஆன்மீக உணர்வு ஏற்படும். இதன் காரணமாக உறவுகள் மற்றும் அண்டை வீட்டில் உள்ளவர்கள் உடனான உறவு பாதிக்கப்பட்டது உட்பட, கடந்த காலத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள். இது வருங்காலத்தில் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரமாக இருக்கும்.
ரிஷபம்: இன்று, சாதாரணமாக தொடங்கி, குதூகலத்துடன் முடிவடையும். மதிய நேரத்தில் மன அழுத்தமும், பதற்றமும் உண்டாகலாம். எனினும் மாலை நேரத்தில், மனதிற்கு பிடித்தவர்கள் மற்றும் அன்பு செலுத்துபவர்களுடன் இனிமையாக மாலைப் பொழுதைக் கழிப்பீர்கள்.
மிதுனம்: உணவு பழக்கவழக்கத்தின் மீது தனிக் கவனம் செலுத்துவீர்கள். புதிய வேலைக்கான நேர்காணல் தேர்வில் பங்கு பெறும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் மேல் அதிகாரிகளிடம் இருந்து ஊக்கம் பெறுவீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால் சச்சரவுகளிலிருந்து விலகி இருக்கவும். ஏனெனில் இதனால் உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
கடகம்:இன்றைய தினத்தின் முதல் பகுதியில், பதற்றமான மன நிலை இருக்கும். பணியிடத்திலும் மிகவும் பதற்றமடைந்து கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். உங்களது ரத்தக் கொதிப்பை சோதித்துக் கொள்வது நல்லது. தியான பயிற்சியை கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் நிதானத்தை இழக்க வேண்டாம். ஏனென்றால் இதன் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும். மலை ஏறுவது போன்ற சவாலான நடவடிக்கைகளில் பங்கு கொள்ள முயலலாம்.
சிம்மம்: இன்று, உங்களுக்குள் மறைந்திருக்கும் கலை உணர்வு வெளிப்படும். புகழ்பெற்ற கலைஞர்கள் போல் இல்லை என்றாலும், உங்களது கலைநயமிக்க பணிகள் தனித்துவம் உள்ளதாக இருக்கும். மதிய நேரத்தில், உங்கள் பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரும் விதத்தில் செயல்படுவீர்கள். பணியில் இருக்கும் போது, நீங்கள் வெளிப்படுத்தும் ஆற்றலும், உற்சாகமும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். எனினும் குறை கூறுவார்கள். அதுகுறித்து கவலைப்படாமல் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யவும்.
கன்னி: காலைப் பொழுது மந்தமாக தொடங்கினாலும், மாலையில் நிலைமை மாறி உற்சாகம் ஏற்படும். மதியம் ஏற்பட்ட சில தடைகளின் காரணமாக உங்களுக்கு மனம் அழுத்தம் இருக்கலாம். ஆனால் மாலையில் நெருங்கியவர்கள் மற்றும் மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தைக் கழித்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.