மேஷம்:சந்தோஷமான செய்தி உங்களைத் தேடி வரும். அதன் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். அந்த செய்தி தனிப்பட்ட வகையில் இருக்கலாம் அல்லது உங்கள் தொழில் தொடர்பான செய்தியாக இருக்கலாம் அல்லது நிதி ஆதாயமாக இருக்கலாம். உங்களது நற்பெயர் காக்கப்படும் நாள்.
ரிஷபம்: இன்று ஈடுபாட்டுடன் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் கலை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. அதனால் நிபுணர் தன்மையுடன் செயல்பட்டு, உங்களுக்கு இட்ட பணிகளை நிறைவேற்ற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, நீண்ட நாட்களாக மனதிலிருந்த கவலைகள் நீங்கும்.
கடகம்: நீங்கள் கடினமாக உழைத்த பணத்தைச் செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகவும், உங்களுக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் பணத்தைச் செலவிடுதல் நல்லது. உங்கள் பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
சிம்மம்: உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு செயல்படக்கூடாது. உங்கள் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நீங்கள் பொறுமையாகச் செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம்.
கன்னி: உங்களைச் சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்களது அறிவாற்றலும், அனைவரையும் அனுசரித்துச் செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குடும்பத்தினருடன் நல்லபடியாக நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும்.