தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

உங்களது முயற்சிக்கான பலனாக வெற்றி கிடைக்கலாம்.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 6:38 AM IST

மேஷம்:இன்று ஒரு சவாலான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளலாம். ஆக்கபூர்வமாக அல்லாத ஒரு விஷயத்திற்கு ஆதரவாக நீங்கள் செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதைப் போல் உணரக்கூடும். உங்கள் விருப்பப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. சற்று பொறுமையாக இருந்து, மன அழுத்தத்திலிருந்து விடுபடவும்.

ரிஷபம்:இன்று உங்கள் எண்ண ஓட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உங்களது நினைப்பின் காரணமாக, சர்ச்சைகள் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தினால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் வாய்ப்புண்டு. உங்களை நீங்களே ஆராய்ந்து கொண்டு செயல்பட்டால், பிரச்சனைகளுக்கான தீர்வினை காண முடியும்.

மிதுனம்:இன்று நீங்கள் தனிமையில் இருப்பது போல் உணரக்கூடும். இந்த குழப்பமான மனநிலையிலிருந்து வெளி வர மற்றவர்களின் உதவியை நாடலாம். தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமானவர்களின் அன்பைப் பெற சிறந்த நாளாக இந்நாள் விளங்கும்.

கடகம்: புதிய முயற்சிக்கான பலனாக வெற்றி கிடைக்கப் பெறலாம். இந்த நாள் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்ற நாளாக அமையும்.

சிம்மம்: உங்களுடைய பெரும்பாலான நேரம் வேலை செய்வதில் செலவிடப்படும் வாய்ப்புள்ளது. இன்று அனைத்து பணிகளிலும் சிறந்து விளங்குவீர்கள். தொழில்முறை உறவுகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் சக ஊழியர்களுடன் நீங்கள் நல்ல உறவை வைத்திருப்பீர்கள். இன்று வணிகத்திற்கு உகந்த நாளாக இருக்கும்.

கன்னி:நீங்கள் எந்த செயல் செய்தாலும், அதில் சிறந்து விளங்கக் கூடிய நாளாக அமையும். நீங்கள் வெகு நாட்களாக வெளிநாட்டு வியாபாரம் செய்ய எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்கள் தோற்றத்தையும், ஆளுமையையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்தல் அவசியமாகும்.

துலாம்:மனதில் உள்ள கலை தன்மையை வெளிக்கொண்டு வரவும். கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். நட்சத்திரங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருந்து, அனுபவங்களைக் கொடுக்கும். இதன் விளைவாக, வீட்டை அலங்கரிக்க உங்கள் மனம் மிகவும் விரும்பும்.

விருச்சிகம்:புதிய கூட்டு முயற்சித் திட்டத்தின் விளைவாக, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் பொறுமையாக இருங்கள், ஏனெனில் நிலைமை விரைவில் சீராகும்.

தனுசு:ஆலோசனையைப் பெறுவதற்கு தயாராக இருங்கள். ஏனெனில் அது திட்டமிடப்படாத வகையில் மற்றும் எதிர்பாராத விதமாக இருக்கும். இந்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளத்தக்கதாக இருப்பதால், அதைக் உதாசீனப்படுத்தாதீர்கள். ஆனால் முடிவு உங்கள் கையில் இருக்க வேண்டும். மேலும், தீவிரமாக யோசித்து சரியான முடிவு எடுப்பது நல்லது.

மகரம்:அயல்நாட்டுக் கல்விக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் நாளாக இருக்கும். நீங்கள் மேற்படிப்பிற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நன்மையைத் தரும். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று லாபகரமான நாளாக அமையும். உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்த போதிலும், அவற்றை ஆராய்ந்து சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கும்பம்:உங்கள் வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது, ஆகையால் கடினமாக உழைத்தல் அவசியம். சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்கள் முயற்சியை பாராட்டுவார்கள். உங்கள் பயத்தை விடுத்து துணிந்து செயல்பட்டால் மட்டுமே வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் வெற்றி கிட்டும்.

மீனம்:எதிர் பாலினத்தவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமைய பெறலாம். எதிர் பாலினத்தவருடன் சிறந்த நட்புறவு ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்கள் காதல் துணையைத் தேடுபவராக இருந்தால், நெடுநாட்களாக ரசித்தவரின் மனதை வெற்றி அடைய ஏற்ற நாளாக அமையக்கூடும்.

ABOUT THE AUTHOR

...view details