தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

மேஷம் புத்தாண்டு பலன் 2025: திருமண பந்தம் களைக்கட்டும் ஆண்டிது! - 2025 RASIPALAN FOR ARIES

Aries New Year Rasipalan: 2025ஆம் ஆண்டின் மேஷ ராசிக்காரர்களுக்கான பலன் குறித்துப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2025, 12:02 AM IST

மேஷ ராசி நேயர்களே! மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டின் ஆரம்பம் சாதகமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாருக்காவது இந்த ஆண்டு திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, ஒரு மழலை செல்வம் உங்கள் வீட்டிற்கு வரலாம்.

காதல் உறவுகளைப் பொறுத்தவரையில், ஆண்டின் ஆரம்ப மாதங்கள் பாசிட்டிவ்வான விளைவுகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் இருவருக்கிடையே நல்ல புரிதலும், காதலும் அதிகம் இருக்கும். ஆண்டு முழுவதும், உங்கள் உறவை பேணுவதில் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கை நிறைவானதாக இருக்கும். இது மகிழ்ச்சி மற்றும் பரஸ்பர பிணைப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.

இருப்பினும், ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்திற்குள் சில பதற்றங்கள் ஏற்படலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். இது உங்கள் நிதிநிலைமையிலும் பிரதிபலிக்கும், அதேசமயம் ஏற்றத் தாழ்வு ஆகிய இரண்டையும் சந்திப்பீர்கள். எவ்வாறாக இருந்த போதிலும், நீங்கள் ஒரு நல்ல வருமானத்தை சம்பாதிப்பதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு, பல ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள்.

சொத்தில் முதலீடு செய்வதைப் பற்றி யோசியுங்கள், இது குறிப்பிடத்தக்க வருமானத்தைத் தரக்கூடும். உங்கள் பேச்சு திறனின் உதவியால் மற்றவர்களை சிறப்பாக வேலை வாங்குவீர்கள். இதனால் உங்கள் திறனும் மேம்படும். தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சரியான சமயம் இது தான். அதிருஷ்டக் காற்று உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கை முன்னேற ஆதரவும் கிடைக்கும்.

உங்கள் வணிக கூட்டாளருடனான உங்கள் உறவு வலுவடைய வாய்ப்புள்ளது. இது வியாபாரம் செழித்து வளர உதவும். அதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இது உங்கள் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க சிறந்த பதவி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளது அல்லது சம்பள உயர்வையும் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், பணியிடத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் மத சம்பந்தமான ஒரு புனித யாத்திரை மேற்கொள்வதற்கான சிறந்த தருணம் இது தான்.

சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தின் உயர்வுக்கும் வழிவகுக்கும். குடும்பத்திற்குள் சில உடல் நலக்கோளாறுகள் எழக்கூடும். ஆனால் அவை ஆண்டின் நடுப்பகுதியில் சரியாக வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உங்கள் மீதான நம்பிக்கையுடன், உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள்.

மற்றவர்களுக்கு உதவுவதும் நன்மை தரும். ஏற்கனவே உள்ள கடனை திருப்பிச் செலுத்த கடன் வாங்கலாமா என சிந்தித்துக் கொண்டு இருப்பீர்கள். இது வெற்றிகரமாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தமட்டில், படிப்பில் சவால்களை சந்திக்கக் கூடும். ஆனால் கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும். போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க, கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் முக்கியம். இந்த ஆண்டு உயர்கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடல்நலத்தைப் பொறுத்த வரையில் தேவையில்லாமல் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேற அதிக வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details