சென்னை:சென்னை பெசன்ட் நகரில் உள்ள புகழ்பெற்ற குட்டி வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52ஆம் ஆண்டு திருவிழா, ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் இன்று கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும் கோலாகலமாகத் துவங்கியது.
இந்த திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் துவங்கி. செப்டம்பர் 8ஆம் தேதி வேளாங்கண்ணி மாதா முடிசூட்டு நிகழ்ச்சியுடன் நிறைவுபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் சிறப்பு திருப்பலி, தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிளும் திருப்பலி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியையொட்டி, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் மற்றும் கழிவறை என்று அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறுகையில், “இந்த விழாவில் மக்கள் அனைவரும் நல்ல விதமாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், வயநாடு மக்கள் பேரிடர் சோகத்தில் இருந்து மீண்டு நல்வழி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.