ஐதராபாத்: சீன ராணுவத்தின் முக்கிய படைப்பிரிவுகளில் ஒன்றான Strategic Support Force-ஐ நீக்குவதாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி சீனா அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் சீன ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது தான் இந்த அமைப்பு.
விண்வெளி, சைபர், தகவல் மற்றும் மின்னணு தாக்குதல் ஆகிய துறைகளில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வந்தது. இந்நிலையில், சீனா அரசால் இந்த அமைப்பு நீக்கப்பட்டதை அடுத்து அதன் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தகவல் உதவிப் படை () சைபர்ஸ்பேஸ் படை, ஏரோஸ்பேஸ் படை என சுதந்திர அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அமைப்புகளும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையை கொண்ட மத்திய ராணுவ ஆணையத்தை கீழ் இயங்கும் என்றும் அதன்படி கட்டளைகள் மற்றும் தகவல்கள் நேரிடியாக பகிர மற்றும் பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா ராணுவம் ஆயுதங்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ராக்கெட் படை ஆகிய நான்கு சுதந்திர இயக்கங்களை கொண்ட உள்ளடக்கியது.
சைபர், தகவல் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் சீனா எவ்வளவு ஆர்வம் கொண்டு உள்ளது என்பதை இது மேலும் கோடிட்டு காட்டுகிறது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், மறுசீரமைப்பிற்கு முன்னதாக இந்த விஷயத்தில் தீவிர விவாதங்கள் நடந்திருக்கும் என்றும் அதேநேரம் சீனா என்பதால் அதில் இறுதி முடிவில் விவாதங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் தெரியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது, சைபர்ஸ்பேஸ் படை தேசிய இணைய எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நெட்வொர்க் ஊடுருவல்களை உடனடியாக கண்டறிந்து எதிர்த்தல் மற்றும் தேசிய இணைய இறையாண்மை மற்றும் தகவல் பாதுகாப்பை பேணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சைபர் தாக்குதல் செயல்பாடுகள் என்பது மத்திய ராணுவ ஆணையத்தின் எதிரிகளிடம் இருந்து வரும் எந்தவிதமான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் விண்வெளிப் படையானது சீன விண்வெளித்துறையின் தேவையான விண்வெளியில் பாதுகாப்பாக நுழைதல், வெளியேறுதல், மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட பயன்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
இந்தியா உள்பட பெரும்பாலான நவீன ஆயுதப் படைகளுக்கு தனி விண்வெளி அமைப்புகள் உள்ளன. அண்மையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விண்வெளி என்பது வான், நீர்ப்பரப்பு மற்றும் நில பிரதேசங்களில் தனது ஆதிக்கங்களை செலுத்திக் கூடியது என்று தெரிவித்திருந்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தகவல் தொடர்பு தாக்குதலை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீரான இடைவெளியில் பெயர் மாற்றுவதும், பல ஊடக தளங்களில் சீனக் கதைகளை முன்னிறுத்துவதும் இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் சீனாவின் மூன்று போர் கருத்தின் ஒரு பகுதியாகும், இது பொதுக் கருத்து, உளவியல் மற்றும் சட்டப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சீன ராணுவத்தின் மறுசீரமைப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போதைய SSF அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியடையவில்லை மற்றும் விண்வெளி, சைபர் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.