தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

விரிவான கட்டுரை: டிஜிட்டல் பொது கட்டமைபில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதால் ஆசியான் நாடுகளுக்கு என்ன நன்மை? - EXPLAINED

டிஜிட்டல் பொது கட்டமைப்பில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது என ஆசியான்-இந்தியா இடையே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து ஈடிவி பாரத் அலசுகிறது.

21ஆவது ஆசியான் உச்சிமாநாட்டில் தலைவர்கள்
21ஆவது ஆசியான் உச்சிமாநாட்டில் தலைவர்கள் (image credits-ANI)

By Aroonim Bhuyan

Published : Oct 12, 2024, 11:41 AM IST

புதுடெல்லி:லாவோஸின் வியன்டியானில் நடைபெற்ற 21ஆவது தெற்கு ஆசிய ஆசிய நாடுகள்(ஆசியான்)-இந்தியா உச்சிமாநாட்டில் , டிஜிட்டல் மாற்றங்களை முன்னெடுப்பது குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஆசியான் நாடுகள்-இந்தியா இடையே டிஜிட்டல் பொது கட்டமைப்புகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பதே இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாகும்.

டிஜிட்டல் பொது கட்டமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு: டிஜிட்டல் மாற்றங்களுக்கு ஊக்கமளித்தல், அனைவரையும் உள்ளடக்கியதை முன்னெடுத்தல், திறனை மேம்படுத்துதல், பொது சேவை விநியோகத்தில் புதுமை படைத்தல், பல்வேறு உள்நாடு மற்றும் சர்வதேச பொருளில் தனிநபர்களை, சமூகத்தை, தொழிற்துறை, அமைப்புகளை, நாடுகள் முழுவதையும் இணைத்தல் ஆகிய டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் முக்கியமான பங்கு வங்கிப்பதை இந்த கூட்டறிக்கை அங்கீகரிக்கிறது.

பிராந்தியம் முழுமைக்கும் டிஜிட்டல் பொது கட்டமைப்புகளை வளர்ச்சியை முன்னெடுத்தலுக்கான பல்வேறு வகையான தளங்களில் டிஜிட்டல் பொது கட்டமைப்பு ஆளுகையை உபயோகித்தல் மற்றும் வளர்ச்சி மற்றும் அமல்படுத்துதலில் அறிவை, அனுபவத்தை , சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், பரஸ்பரம் ஒப்புதலுடன் ஆசியான் உறுப்பினர் நாடுகள் மற்றும் இந்தியா இடையே கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்காக டிஜிட்டல் பொது கட்டமைப்பின் சக்தியை கூட்டு முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கான வளமான வாய்ப்புகளை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பருநிலை செயல்பாடுகள் ஆகியவற்றின் பன்முக சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் பொது கட்டமைப்பின் சக்தியை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட உள்ளன.

டிஜிட்டல் வெளியில் முன்னணியில் இந்தியா :அண்மை ஆண்டுகளில் டிஜிட்டல் பொது கட்டமைப்பு என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றத்துக்கான சக்தியை வ.ழங்குதல் மற்றும் எதிர்கால சர்வதேச பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளிடையே கூட்டாண்மைக்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்துள்ளது. பொருளாதார மேம்பாடு, பிராந்திய வலு மற்றும் தொழில்நுட்ப தலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெரும் முக்கியத்துவத்தை இந்த கூட்டாண்மை கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க :"போர்களத்தில் இருந்து சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காது" - கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஆதார் (டிஜிட்டல் அடையாள அட்டை), யுபிஐ (ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை) மற்றும் இந்தியா ஸ்டாக் திறந்தவெளி கட்டமைப்பு என இவையெல்லாம் பல லட்சகணக்கான மக்களுக்கான சேவை அணுகலை மாற்றியமைத்தது ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் வெளியில் இந்தியா ஒரு முன்னோடியாக இருக்கிறது. வங்கி உள்ளிட்ட அரசின் நிதி சேவைகளை மக்கள் பெறுவதற்கு உதவுவதற்காக ஜன்தன் கணக்குகள், ஆதார், மொபைல் போன்கள் ஆகியவற்றை உபயோகித்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா பெரும் அளவில் முன்னேறி இருக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெரும் எண்ணிக்கையிலான முறைகள் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

ஓஎன்டிசி கட்டமைப்பு :இ-காமர்ஸ் வணிகத்தில் இந்தியா புதுமை படைத்தது மட்டுமின்றி அதனை ஜனநாயகப்படுத்தி, ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்கவும், விற்கவுமான திறனை உலகமயமாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, இலாப நோக்கற்ற நிறுவனமாக ஓஎன்டிசி (ONDC) எனும் டிஜிட்டல் வணிகத்தில் திறந்தவெளி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இ-காமர்ஸ் பரவ வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஓஎன்டிசி ஈடுபட்டுள்ளது. இது ஒரு தொழில்நுட்ப முறையோ அல்லது மென்பொருளோ அல்ல. சில்லறை வணிகர்கள், வாடிக்கையாளர்கள் இருதரப்பையும் இணைக்கும் ஒரு தொழில்நுட்ப தளமாக இ-வணிகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மாதிரியாக ஓஎன்டிசி உருவாக்கி உள்ளது.

2022-23ஆம் ஆண்டில் இந்தியா தலைமையில் நடந்த ஜி20 மாநாட்டுக்குப் பின்னர், ஒரு எதிர்கால கூட்டமைப்பு என்ற முயற்சியின் கீழ் அனைத்து நாடுகள் மற்றும் பங்கெடுப்பாளர்களை கொண்ட எதிர்கால டிஜிட்டல் பொது கட்டமைப்பை அனைத்து நாடுகளும் உபயோகிக்கும் வகையிலான ஒருங்கிணைப்பை, வடிவமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கீழ் நிலையில் உள்ள மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட கூட்டாண்மை நாடுகள் தங்கள் அனுபவத்தின் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக, பொருளாதார மற்றும் டிஜிட்டல், நீடித்த வளர்ச்சிக்கு அரசின் ஆளுகையை முன்னெடுப்பதை கற்றுக் கொடுப்பதை இது நோக்கமாக கொண்டிருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த கூட்டறிக்கை:கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடந்ததன் தொடர்ச்சியாக, சர்வதேச டிஜிட்டல் பொது கட்டமைப்பு களஞ்சியம் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் மற்றும் 15 இதர நாடுகள் தங்களது டிஜிட்டல் பொது கட்டமைப்பை இதில் பகிர்ந்திருந்தன. எனினும் சிங்கப்பூர் தவிர பிற ஆசியான் நாடுகள் தங்களது டிஜிட்டல் பொது கட்டமைப்பை இதில் பகிரவில்லை. இத்தகைய சூழலில் ஆசியான்-இந்தியா நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் பொது கட்டமைப்பை வலுப்படுத்தி ஒத்துழைப்பதற்கான இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்ச்சியான டிஜிட்டல் கட்டமைப்பின் எல்லை கடந்த வர்த்தகத்துக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளை மேம்படுத்த முடியும். இதன் மூலம் பிற வழிகளிலான பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தை குறைக்க முடியும். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் 2 பில்லியன் மக்களைக் கொண்ட ஒருங்கிணைந்த சந்தையில் , நிதி பரிமாற்றங்களை முறைப்படுத்துவதன் மூலம் பலன் பெற முடியும். பொருளாதார சார்பு நிலையை முன்னெடுக்க முடியும்.

பரஸ்பரம் பலன்கள் :இந்தியாவின் விலை குறைவான, உயர்ந்த அளவிலான டிஜிட்டல் தீர்வுகள் ஆசியான் நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளன. இந்தியாவின் உதவியுடன் அந்த நாடுகள் டிஜிட்டல் பொது கட்டமைப்பை முன்னெடுப்பதன் மூலம் பிராந்தியத்தில் அனைவரையும் உள்ளடக்கியதாக டிஜிட்டல் தளத்தை உருவாக்க முடியும். மறுபுறம், ஆசியான் நாடுகளின் அனுபவத்தில் ஸ்மார்ட் சிட்டிகள், இ-வணிகம், நிதி தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிநவீன டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்தியா பலன் பெற முடியும்.

இந்தியாவின் யுபிஐ முறை டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கி ரீதியான மரபு சார்ந்த பணப்பரிமாற்ற முறைகள் குறைவாக உள்ள கடைகோடியில் உள்ள கிராமங்களில் கூட யுபிஐ பணப்பரிமாற்ற முறை செயல்பாட்டில் உள்ளது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட ஆசியான் நாடுகள் இந்தியாவின் பணம் செலுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கி, மேலும் உள்ளடக்கிய பொருளாதாரங்களாக தனிநபர்கள், சிறு வணிகர்கள் பங்கெடுக்கக் கூடிய டிஜிட்டல் வணிக சந்தையை உருவாக்க முடியும். இந்தியா-ஆசியான் நாடுகளின் கூட்டாண்மையால் எல்லை கடந்த பணப்பரிமாற்றங்களுக்கு வசதி அளிக்கக் கூடிய பணப்பரிமாற்ற முறைகள் உருவாக்கப்படும். இது இந்தியா-ஆசியான் நாடுகளுக்கு இடையே இந்த பிராந்தியம் முழுவதும் வர்த்தகம், பணம் செலுத்தும் முறைகள், நிதி பரிவர்த்தனைகளுக்கு உதவி புரிவதாக இருக்கும்.

தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் பணம் செலுத்தும் முறைக்கான செயலிகள் மேற்கொள்வது ஆகியவற்றில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், மாறுபட்ட இணைய அணுகல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் டிஜிட்டல் தயார்நிலை ஆகியவை சவால்களை ஏற்படுத்துகின்றன. ஆசியான் நாடுகளின் டிஜிட்டல் திறனை முன்னெடுப்பதற்கு டிஜிட்டல் இடைவெளிகளைக் குறைத்தல் மற்றும் கொள்கை சீரமைப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகள் முக்கியமானவை.

இந்த சூழலில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் ஆசியான் நாடுகள் பெரிதும் பயனடைகின்றன. அளவிடக்கூடிய டிஜிட்டல் தீர்வுகள், நிதி உள்ளடக்கம், இணையப் பாதுகாப்பு மற்றும் மின்-ஆளுமை ஆகியவற்றில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், ஆசியான் நாடுகள் தங்களுடைய சொந்த டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நகர்வதை விரைவுபடுத்த முடியும்.

இந்த கூட்டாண்மை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு தென்கிழக்கு ஆசியா முழுவதும் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் பிராந்திய ஒத்துழைப்பு, புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மூலோபாய சுயாட்சி ஆகியவற்றை வலுப்படுத்தும்.

ABOUT THE AUTHOR

...view details