தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் பண்ணுங்க! - ANTI AGING TIPS

தினசரி நடனமாடுவதற்கு என சிறிது நேரம் ஒதுக்குவது மனதை புத்துணர்ச்சியாக வைத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. வயதானாலும் இளமையாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 30, 2025, 4:49 PM IST

நம்மில் பலர் அழகாக இருக்க மார்கெட்டில் கிடைக்கும் பல அழகு சாதன பொருட்கள் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால், இவற்றைத் தவிர்த்து, சில பழக்கங்களை அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக வைத்துக் கொண்டால், அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தண்ணீர் குடியுங்கள்: தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதமாகவும் இளமையாகவும் இருக்கும் என 2018 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட "The role of hydration in skin aging"" என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோப்புப்படம் (Credit - Pexels)

சரியான உணவு: நாம் உண்ணும் உணவில் எப்போதும் ஒரு கண்ணோடு இருக்க வேண்டும் என்கின்றனர். கவனத்துடன் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. இதன் விளைவாக, செரிமான செயல்முறை மேம்பட்டு சருமத்தில் எந்த பாதிப்புகளையும் விளைவிக்காது. புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

நடனம்: நடனமாடுவது உடலை சுறுசுறுப்பாகி மனநிலையை மகிழ்ச்சியாக்கிறது. இதன் விளைவாக சருமமும் புத்துணர்ச்சியடைந்து ஆரோக்கியமாக இருக்கும். எனவே, தினசரி நடனமாடுவதற்கு என சிறிது நேரம் ஒதுக்க பரிந்துரைக்கப்படுகிறது. 2018 இல் ஜர்னல் ஆஃப் ஏஜிங் அண்ட் பிசிகல் ஆக்டிவிட்டியில் வெளியிடப்பட்ட "The effects of dance on physical and mental health in older adults" என்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம் (Credit - Pexels)

வாய்விட்டு சிரியுங்கள்: தினமும் நெருங்கமானவர்களுடன் சிரித்து மகிழ்வது மன அழுத்தத்தை குறைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுப்பதாகவும் கூறப்படுகிறது. தினமும் சிறிது நேரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அரட்டையடித்து மகிழுங்கள்.

இயற்கையுடன் தொடர்பு கொள்ளுங்கள்:இயற்கை சூழலில் கிடைக்கும் காற்று மன அழுத்தத்தை குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால், மன அழுத்தம் குறைந்து எப்போதும் புத்துணர்ச்சியாகவும் புண்ணகையுடனும் இருப்பீர்கள். இதன் விளைவாக ஆரோக்கியமான சருமம் உங்களை வந்து சேரும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

8 மணிநேர தூக்கம்: செல்போனில் உள்ள கதிர்வீச்சு கண்களில் அழுத்தத்தை அதிகரித்து தூக்கத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக தூக்கமின்மை ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. எனவே, தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

யோகா: தியானத்துடன் சுவாசப் பயிற்சிகளையும் பயிற்சி செய்ய யேகா பரிந்துரைக்கிறது. தினமும் பத்து நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்வதால் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதோடு நுரையீரலின் திறன் அதிகரிக்கும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

உடற்பயிற்சி: நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

தோல் பராமரிப்பு: இளமையாக இருக்க சன்ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் சருமம் நீர்ச்சத்து மட்டுமின்றி பளபளப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கண்களுக்கு கீழ் வீக்கம்? தடுக்க உதவும் 6 சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ABOUT THE AUTHOR

...view details