எறும்பு, கரப்பான் பூச்சி, எலி, பல்லி வரிசையில் வீடுகளை சேதப்படுத்துவதில் கரையானுக்கும் முக்கிய பங்கு உண்டு. புத்தகங்களை அரிப்பதில் தொடங்கி மரப்பெருட்களை அரித்து உங்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் கரையான் சேதப்படுத்துகிறதா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக கரையானை எப்படி அழிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உப்பு: ஈரப்பதமான இடங்கள் கரையான் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் சுறுசுறுப்பாகவும், கரையான் இனபெருக்கம் செய்யும் காலமாக அமைகிறது. இந்நிலையில், உங்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்தால், அந்த இடங்களில் உப்பு தூவி விடுங்கள். இல்லையென்றால், நீரில் உப்பு கலந்து கரையான் இருக்கும் இடங்களில் தெளித்து விடுவது நல்ல தீர்வாக இருக்கும்.
எலுமிச்சை, வினிகர் ஸ்ப்ரே: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் வினிகர் மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலக்கவும். இப்போது, இதை கரையான் இருக்கும் இடங்களில் வாரத்திற்கு மூன்று முறை தெளித்து வர வேண்டும். எலுமிச்சை பழத்தின் நறுமணம் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால், கரையான் வீட்டிலிருந்து முற்றிலுமாக ஓடிவிடும்.
கிராம்பு:ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன், 5 முதல் 8 கிராம்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் நிறம் மாறி நன்கு கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்து தண்ணீரை ஆற விடுங்கள். பின்னர், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த தண்ணீரை ஊற்றி கரையான் இருக்கும் இடத்தில் அடிக்கடி தெளித்து வருவதால் கரையான் தொல்லை நீங்கும்.
இதையும் படிங்க:உங்கள் கிச்சனில் கரப்பான் பூச்சிகள் ஓடி விளையாடுகிறதா? 'இதை' தெளித்தால் மீண்டும் வரவே வராது..!
வேப்ப எண்ணெய்:இயற்கையான பூச்சிக்கொல்லியாக செயல்படும் வேப்ப எண்ணெய்யை கரையான் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால், உங்கள் வீட்டிலிருந்து ஒரு மாதத்தில் கரையான் முற்றிலுமாக நீங்கும்.