தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஷாட் அண்ட் ஸ்வீட் 2025 புத்தாண்டு வாழ்த்துகள்..மறக்காம நோட் பண்ணிக்கோங்க! - NEW YEAR WISHES

2025 புத்தாண்டு தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பகிர சில சிறப்பான வாழ்த்துச் செய்திகள் இதோ..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் (Credit - Etv Bharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 30, 2024, 12:08 PM IST

சென்னை: 2024ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் உள்ள நாம், 2025ம் ஆண்டு நல்ல மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்ற நம்பிக்கையோடு வரவேற்க காத்திருக்கிறோம். வெள்ளம், இழப்பு, சோகம், தோல்வி என பல்வேறு நினைவுகளையும் அதே நேரத்தில் வெற்றி, மகிழ்ச்சி, புதிய வரவு என மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்த 2024ம் ஆண்டிற்கு நன்றி சொல்லி வழியனுப்பும் நேரம் வந்துவிட்டது.

புதிதாக பிறக்கப்போகும் 2025ம் ஆண்டு, நல்லதொரு மாற்றத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு வரவேறுங்கள். அந்த வகையில், தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் பகிர சில வாழ்த்து செய்திகள் இதோ..

புத்தாண்டு நல்வாழ்த்துகள்:

  • இந்த புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து வளங்கள், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
  • நல்லதே நடக்க..நானிலம் சிறக்க..மகிழ்ச்சி பெருக..மனித நேயம் சிறக்க எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
  • புதிய வருடத்தில் புதிய கனவுகளுடன் தைரியத்துடன் நகருங்கள். வெற்றி நிச்சயம் உங்களையே தேடிவரும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக 2025 அமைய, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும். துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும். கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • புதியதொரு வருடம் புத்தம் பூ போல மலர்கிறது. 365 நாட்களும் இந்த பூ வாடாமல் உங்கள் வாழ்வில் வாசம் வீச எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் (Credit - Canva)
  • எல்லையில்லா மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தை தரும் ஆண்டாக 2025 அமைய புத்தாண்டு வாழ்த்துகள்.
  • பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் தடைக் கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமைய அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
  • வருடங்கள் முன்னேறுவது போல், உங்கள் வாழ்கையும் முன்னேறட்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வெற்றிகள் பதியட்டும், தோல்விகள் தேயட்டும் புன்னகை பூக்கட்டும் முயற்சிகள் முளைக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • புதிய எண்ணங்கள் மலரட்டும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரட்டும், புதிய உறவுகள் இணைந்து மகிழ்ச்சி தரட்டும், புதிய நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அலங்கரிக்கட்டும். பழைய நினைவுகளோடு புதிய தொடக்கம் நிகழட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் (Credit - Canva)
  • புதிதாய் பிறந்ததாய் உள்ளம் நினைக்க, பூக்களின் வாசமாய் நம்பிக்கை தெளிக்க, நல்லதொரு நாளாய் தினமும் விடிய, இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  • துன்பங்கள் பனிபோல் விலகி, நம்பிக்கையுடன் வாழ்க்கை தொடர இந்த புத்தாண்டு ஒரு கலங்கரை விளக்கமாக அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  • விரும்பிய அனைத்தும் கிடைத்து, மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் உங்கள் வாழ்வு நிலையாக இருக்க, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  • ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தையும், ஒரு புதிய வாய்ப்பையும் கொடுக்கிறது.
  • இந்த புத்தாண்டு அன்பு, அரவணைப்பு, அமைதி கலந்த தருணங்களை தரும் வருடமாக அமைய வாழ்த்துக்கள்
  • அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • 2025ஆம் ஆண்டின் 365 நாட்களும் மகிழ்ச்சியும், நன்மையும் வந்தடைய வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் (Credit - Canva)

ABOUT THE AUTHOR

...view details