தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

உறைமோர் இல்லாமல் கெட்டித் தயிர் செய்வது எப்படி? சுலபமான 2 வழிகள் இதோ! - TIPS TO MAKE THICK CURD IN TAMIL

சுலபமான முறையில் ஹோட்டல் ஸ்டைல் கெட்டித் தயிர் வீட்டிலேயே எப்படி செய்வது? மற்றும் உறைமோர் இல்லாமல் தயிர் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 10, 2024, 3:44 PM IST

தினசரி உணவில் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை பெருபாலானோர் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கேற்ப, வீட்டில் தயிருக்கு உறை ஊற்றி வைக்கும் பழக்கமும் பலருக்கு இருக்கும். ஆனால், சில நேரங்களில் தயிர் தண்ணீயாகவும் இல்லையென்றால், தயிராக மாறாமல் பாலாகவே இருக்கும். இந்த மாதிரியான பிரச்சனைகளால், தற்போது பலரும் தயிரை கடையில் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் நீங்களும் ஒருவரா? இனி, கவலைய விடுங்க..கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளை பின்பற்றி தயிர் செய்தால் ஹோட்டலில் கிடைப்பது போல, கெட்டித் தயிர் கிடைக்கும்.

உறைமோர் இல்லாமல் தயிர் செய்வது எப்படி?:

  • தண்ணீர் சேர்க்காத 1 லிட்டர் பசும் பாலை அடுப்பில் வைத்து சூடாக்கி, 1 கொதி வந்ததும் கரண்டியால் கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • இப்போது, பாலை மூடி வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவைக்கவும்.
  • இதற்கிடையில், பாலாடை கட்டிகொண்டால் அதனை தனியாக எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி, அதில் இரண்டு காய்ந்த மிளகாயை மூழ்கும் அளவிற்கு வைக்க வேண்டும். மிளகாயில் காம்பு கட்டாயமாக இருக்க வேண்டும். (பச்சை மிளகாயையும் காம்புடன் பயன்படுத்தலாம்)
  • இப்போது, இதை ஆறு மணி நேரத்திற்கு பின் எடுத்து பார்த்தால் கெட்டியான தயிர் ரெடி.
கோப்புப்படம் (Credit - ETVBharat)

முறை 2:

  • ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 2 டீஸ்பூன் வெதுவெதுப்பான பால் சேர்த்து, விஸ்க் உதவியுடன் நன்கு கலந்து விடவும்.
  • இப்போது, இதை 2 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஊற்றி நன்கு கலந்து 3 மணி நேரத்திற்கு தனியாக வைத்து எடுத்தால் ஹோட்டலில் கிடைப்பது போல கெட்டித் தயிர் தயார்.
  1. குறிப்பு:காய்ச்சின பாலில் பாலாடைகள் அதிகமாக இருக்கும். தயிர் செய்வதற்கு பாலாடைகளை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும். பாலாடையுடன் தயிர் செய்தால் தயிர் கெட்டியாக இருக்காது.
  2. குளிர்காலத்தில், தயிர் செட்டாவதற்கு அதிக நேரம் எடுப்பதால், இரவில் உறை ஊற்றுவதை விட காலையில் உறை ஊற்றி வைக்கலாம். இல்லையென்றால் தயிர் வைத்துள்ள பாத்திரத்தை வெதுவெதுப்பான நீரில் வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து வரும்.

ABOUT THE AUTHOR

...view details