தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கஸ்டர்ட் பவுடரை இப்படி வீட்டிலேயே பக்குவமா செஞ்சு வைங்க..5 நிமிடம் போதும்! - HOW TO MAKE CUSTARD POWDER

custard powder recipe in tamil: குறைந்த பொருட்களை வைத்து வீட்டிலேயே கஸ்டர்ட் பவுடர் செய்வது எப்படி என பார்க்கலாம்..5 நிமிடங்களில் தயாராகும் இந்தப் பொடியை வைத்து இனிப்புகளை செய்து அசத்துங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 16, 2024, 3:48 PM IST

கஸ்டர்ட் பவுடரை பற்றி சிறப்பு அறிமுகம் தேவையில்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் ஐஸ்கிரீம்கள், பழ சாலடுகள், மில்க் ஷேக்குகள், இனிப்பு வகைகள் போன்ற பல்வேறு உணவுகளில் இந்த பவுடர் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி நாம் விரும்பி சாப்பிடும் அனைத்து இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் கஸ்டர்ட் பவுடரை 10 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமா..நாம் தயாரிக்கும் இந்த பவுடரை வைத்து வகை வகையான ரெசிபிகளை செய்தும் அசத்தலாம். இப்படி இருக்க, வீட்டில் கஸ்டர்ட் பவுடர் செய்ய தேவையான பொருட்கள் என்ன? எப்படி தயாரிப்பது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

கோப்புப்படம் (CREDIT - ETVBharat)

தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை - அரை கப்
  • கார்ன்ஃப்ளார் மாவு - 1 கப்
  • பால் பவுடர் - 1 கப்
  • வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - அரை ஸ்பூன்
  • மஞ்சள் ஃபுட் கலர் - 2 சிட்டிகை

செய்முறை:

  1. இதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து நைசாக அரைக்கவும்
  2. அதன் பின்னர், அதே ஜாரில் கார்ன்ஃப்ளார் மாவு, பால் பவுடர், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து நைசாக அரைக்கவும்
  3. கஸ்டர்ட் பவுடர் நைசாக இருப்பது அவசியம். அதற்கு, நாம் அரைத்து வைத்த பவுடரை சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்
  4. இந்த பவுடரை உடனே சேமித்து வைப்பதற்கு பதிலாக, அரைத்த சூடு முற்றிலும் ஆறிய பிறகு ஈரம் இல்லாத உலர்ந்த பாட்டிலில் சேமித்து வைத்தால் போதும். பல நாட்களுக்கு கெடாமல் அட்டகாசமாக இருக்கும்.
  5. அவ்வளவு தான் வீட்டிலேயே ஈஸியாக செய்த கஸ்டர்ட் பவுடர் தயார். இதை எப்போது வேண்டுமானாலும் உங்களுகு பிடித்த மாதிரி செய்து சாப்பிடலாம். அந்தந்த பருவங்களில் கிடைக்கும் மாம்பழம்,வாழைப்பழம், தர்பூசணி, திராட்சை போன்ற பழங்களின் துண்டுகளைச் சேர்த்து நீங்கள் விரும்பும் சுவையில் ஃப்ரூட் கஸ்டர்ட் தயார் செய்யலாம். பழங்கள் கிடைக்கவில்லை என்றால் உலர் பழங்களுடனும் செய்யலாம்.
  6. நான்கு கப் பாலுடன் 3 டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர், ஐந்து பிஸ்தா, முந்திரி,பாதாம், பேரிச்சம்பழம் மற்றும் இரண்டு ஸ்பூன் உலர் திராட்சை இருந்தால் போது. ஈஸியான கஸ்டர்டை வீட்டிலேயே செய்யலாம். இந்த தீபாவளிக்கு உங்களுக்கு பிடித்த இனிப்பை இந்த கஸ்டர்ட் பவுடர் மூலம் செய்து அனுபவியுங்கள்

கஸ்டர்ட் பவுடரை வைத்து என்ன செய்யலாம்?:ஐஸ் கீரிம், புட்டிங், மில்க் ஷேக், கேக்,பிரட், பிஸ்கட் போன்ற பல இனிப்பு வகைகளை செய்து அசத்தலாம்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETVBharat TamilNadu)

ABOUT THE AUTHOR

...view details