தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த அப்பள குழம்பை ஒருமுறை செய்து பாருங்க..ருசி அப்படி இருக்கும்! - APPALAM KULAMBU RECIPE IN TAMIL

சாப்பாட்டிற்கு அப்பளத்தை சைடிஷாக வைத்து சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது?அந்த அப்பளத்தை வைத்து குழம்பு செய்தால் எப்படி இருக்கும்? சுவையான அப்பள குழம்பு எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 12, 2024, 10:39 AM IST

வீட்டில் காய்கறி இல்லையே, என்ன குழப்பு செய்வது என யோசிக்கிறீர்களா? வீட்டில் இருக்கும் அப்பளத்தை வைத்து சுவையான அப்பள குழம்பை செய்து பாருங்க..செம்ம டேஸ்ட்ல இருக்கும். முறையாக எப்படி அப்பள குழம்பு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
  • அப்பளம் - 5 துண்டு
  • பூண்டு - 1 கைப்பிடி
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி - 2
  • புளி - 1 நெல்லிக்காய் அளவு
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு, தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

  1. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், முழு அப்பளத்தை இரண்டு துண்டுகளாக உடைத்து பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  2. இப்போது, அதே எண்ணெய்யில் கடுகு சேர்த்து பெரிந்ததும், வெந்தயம், சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக, கறிவேப்பிலை,பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள்.
  3. அதன் பிறகு, நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். (சின்ன வெங்காயம் இல்லை என்றால், 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்).
  4. வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கி வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. அனைத்தும் வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிகொள்ளுங்கள். பின்னர், கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும். இப்போது, குழம்பிற்கு தேவையான தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில், மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளுங்கள்.
  6. இப்போது, எண்ணெய் பிரிந்து வந்ததும் முன்னதாகவே பொரித்து வைத்த அப்பளங்களை சேர்த்து மூடி போட்டு 2 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் சுவையான அப்பள குழம்பு ரெடி..ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரொம்ப பிடிக்கும்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details