தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பிரட் நிறைய இருக்கா? 10 நிமிடத்தில் தயாராகும் வெரைட்டியான பிரட் ரெசிப்பிஸை செய்து பாருங்க! - BREAD RECIPES

வீட்டில் உள்ள பிரட்களை வைத்து என்ன செய்வது என தெரியவில்லையா? கவலைய விடுங்க..பிரட்டை வைத்து விதவிதமாக செய்யக்கூடிய ரெசிபிகள் என்னென்ன என்பதை காணலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 18, 2024, 11:16 AM IST

உங்கள் வீட்டில் பாக்கெட் பாக்கெட்டுகளாக பிரட்டை வாங்கி வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் முழிக்கிறீர்களா? பிரட்டை வைத்து டக்குனு தயாராகும் ஸ்நாக்ஸ் முதல் நாவில் எச்சில் ஊறவைக்கும் அட்டகாசமான 6 பிரட் ரெசிப்பிகள் செய்து பாருங்கள்..நிமிடத்தில் பிரட் காலியாகிவிடும்..!

1.பிரட் வெஜ் டோஸ்ட்(Veg Bread Toast):

தேவையான பொருட்கள்: பிரட், காய்கறிகள், வெங்காயம், உப்பு, எண்ணெய், நெய், மசாலாப் பொருட்கள்.

  • செய்முறை: உங்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணொலியில், எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கி வைத்த காய்கறிகளை சேருங்கள்.
  • காய்கறிகளை நன்றாக வதங்கிய பின்னர், வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். இப்போது, உங்களுக்கு தேவையான, மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி அடுப்பை அனைத்து விடுங்கள். இந்த கலவையை ஒரு பிரட்டில் வைத்து, அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து அழுத்தி விடுங்கள்.
  • இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து நெய் சேர்த்து நாம் தயார் செய்து வைத்த பிரட்டை இரு புறமும் டோஸ்ட் செய்யுங்கள். அவ்வளவு தான் 5 நிமிடத்தில் பிரட் வெஜ் டோஸ்ட் ரெடி..

2.கார்லிக் பிரட்(Garlic Bread):

தேவையான பொருட்கள்:பிரட், 15 பல் பூண்டு, மிளகுத்தூள், சில்லிபிளாக்ஸ், உப்பு, வெண்ணய்

  • செய்முறை:முதலில் பூண்டை நன்கு மசித்து அல்லது மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து வெண்ணெய், அரைத்து வைத்த பூண்டு, மிளகுத்தூள், சில்லிபிளாக்ஸ் சேர்த்து கலந்து விடுங்கள்.
  • இப்போது, இந்த கலவையை பிரட் மேலே தடவி இன்னொரு பிரட்டை மேலே வைத்து தோசை கல்லில் போட்டு எடுங்கள். தேவைப்பட்டால் பட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள். பிரட் பொன்னிறமாக வந்து விட்டால் போதும் அருமையான கார்லிக் பிரட் தயார்.

3.பிரட் கொத்து(Bread Kothu):

தேவையான பொருட்கள்:பிரட் (ஒரு பிரட்டை 4 முதல் 5 துண்டுகளாக நறுக்கி வைத்து வேண்டும்),முட்டை, வெங்காயம், தங்காளி, மசாலாப் பொருட்கள், எண்ணெய்,பச்சை மிளகாய்

  • செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய், சீரகம், பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர், நறுக்கி வைத்த வெங்காயம், தங்காளியை சேர்த்து வதக்குங்கள்.
  • இப்போது உங்களுக்கு தேவையான அளவு மசாலப்பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கலந்த பின்னர், முட்டையை சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன், உங்களுக்கு தேவையான அளவில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். 2 நிமிடங்களுக்கு கலந்து விட்டு 5 நிமிடங்களில் அடுப்பை அணைத்தால் சூப்பர் டேஸ்டி மற்றும் யெம்மியான பிரட் கொத்து ரெடி!
இதையும் படிங்க: காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பூண்டு இட்லி பொடி செய்வோமா? 10 நிமிடம் போதும்!

4.பிரட் அல்வா (Bread Halwa):

தேவையான பொருட்கள்:8 பிரட் துண்டுகள், 1 கப் எண்ணெய், 3/4 கப் சர்க்கரை, 2 கப் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன் நெய், 15 முந்திரி

  • செய்முறை:பிரட்டின் ஓரங்களை வெட்டி நாம் எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை எண்ணெய்யில் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்
  • மற்றொரு கடாயில், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பின்னர், வறுத்து வைத்துள்ள பிரட்டை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
  • கடாயில் ஒட்டாத அளவு கை விடாமல் கிளறிய பின்னர், நெய்யில் வறுத்த முந்திரிகளை சேர்த்து அடுப்பை அணைத்தால் அல்வா தயார். பரிமாறும் போது சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் என்ன? வரும் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி செய்யும் போது இந்த சிம்பிள் அல்வாவையும் சேர்த்து செய்யுங்கள்..

5.பிரட் பஜ்ஜி(Bread Bajji):

தேவையான பொருட்கள்:பிரட் ஸ்லைஸ், 1/2கப் கடலைமாவு, 1 ஸ்பூன் அரிசி மாவு, மிளாகாய்த்தூள், உப்பு, எண்ணெய்

  • செய்முறை:கடலைமாவுடன், உப்பு, மிளகாய்த்தூள், சேர்த்து கலந்துவிடவும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கலக்கவும்.
  • இப்போது பிரட்டை இரண்டு துண்டுகளாக நறுக்கி, உங்களுக்கு பிடித்த தக்காளி சாஸ், உருளைகிழங்கு மசியல் என விருப்பத்திற்கேற்ப ஒரு பிரட் துண்டு மேல் தடவி மற்றொரு துண்டு பிரட்டால் மூடவும்
  • பின், மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பிரட் பஜ்ஜி ரெடி!

6.ஆலு பிரட்(Aloo Bread):

தேவையான பொருட்கள்:பிரட் ஸ்லைஸ், வேகவைத்த உருளைக்கிழங்கு, மசாலாப் பொருட்கள்,உப்பு, பட்டர்,வெங்காயம், தங்காளி, பச்சை மிளகாய்

  • செய்முறை:ஒரு வாணலியில் எண்ணெய், சீரகம்,பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், உளுளைக்கிழங்கை நன்கு மசித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு தேவையான மசாலாப் பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து வதக்குங்கள்.
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்தால் கிழங்கு மசியல் தயார். இப்போது, ஒரு பிரட் ஸ்லைஸில் இந்த மசியலை சேர்த்து, அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து அழுத்தம் கொடுங்கள்.
  • பின்னர், ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து நாம் தயார் செய்து வைத்த பிரட்டை பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யுங்கள்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details