காதலர் வார பட்டியல் இதோ..
ரோஸ் டே (Rose Day) - பிப்ரவரி 7: காதல் வாரத்தின் முதல் நாளை, ரோஜாக்கள் வரவேற்கின்றன. நம் மனதிற்கு பிடித்தவர்களுக்கு, அன்புக்குரியவர்களுக்கு பிப்ரவரி 7ம் தேதி ரோஜாவைக் கொடுத்து அன்பை, காதலை வெளிப்படுத்தும் நாள். இது காதலர்களுக்கு மட்டுமா என்றால், இல்லை. நட்பை வெளிப்படுத்த மஞ்சள் ரோஜா, காதலை வெளிப்படுத்த சிவப்பு ரோஜா, சமாதானத்துக்கு வெள்ளை ரோஜா கொடுக்கலாம்.
ப்ரப்போஸ் டே (Propose day) - பிப்ரவரி 8: இந்த நாளில், நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ப்ரப்போஸ் செய்யலாம். பிப்.8ம் தேதி இதை செய்வதால், நீங்கள் எந்த அளவிற்கு அவர்கள் மீது உணர்ச்சிகளையும், பாசத்தையும் வைத்துள்ளீர்கள் என்பதை உணர்த்தும். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதை காதலர்கள் மட்டுமல்லாமல், கல்யாணம் செய்தவர்களும் அவர்களது துணைக்கு ப்ரப்போஸ் செய்து நாளை மகிழ்ச்சியாக்குங்கள்.
சாக்லேட் டே (Chocolate day) - பிப்ரவரி 9:பொதுவாக, நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படுத்த சாக்லேட் வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால், பிப்.9ம் தேதி உங்கள் துணைக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பது, சாக்லேட்டை தாண்டி அன்பும் காதலுமாக வெளிப்படும். ஒருவருக்கொருவர் சாக்லேட் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அறியலாம்.
டெடி டே (Teddy Day) - பிப்ரவரி 10: பிப்ரவரி 10ம் தேதி, பிடித்தவர்களுக்கு டெடி பியர் பொம்மை வாங்கி பரிசளித்து அன்பை வெளிப்படுத்தலாம். இது அவர்களது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கருதப்படுகிறது. நண்பர்கள், காதலர்கள், உடன் பிறந்தவர்களுக்கும் டெடி பியர் பரிசளிக்கலாம்.
ப்ராமிஸ் டே (Promise day) பிப்ரவரி 11:காதலர் தின வாரத்தில் இந்த நாளுக்கென்று தனி சிறப்பு இருக்கின்றது. நமக்கு பிடித்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் உறவின் தன்மையையும், அந்த உறவுக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, இந்த உறவுக்கான உன்னதத்தை உறுதிப்படுத்துங்கள். இந்த ஒரு நாள் உங்கள் வருடத்தைக்கூட சிறப்பாக மாற்றும் தன்மை கொண்டது.