தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"இந்தியா-கனடா உறவு பாதிக்கப்பட்டதற்கு ட்ரூடோ மட்டுமே பொறுப்பு"- இந்தியா அதிரடி குற்றச்சாட்டு - INDIA CANADA RELATIONS

"இந்தியா-கனடா உறவு பாதிக்கப்பட்டதற்கு ட்ரூடோ மட்டுமே காரணம்" என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 4:30 PM IST

புதுடெல்லி: காலிஸ்தான் ஆதரவு தலைவர் நிஜ்ஜார் கொலையில் ஆதாரங்கள் தேவை என வலியுறுத்தி வந்த நிலையில் வலுவான ஆதாரங்கள் இல்லை என இப்போது கனடா பிரதமர் உறுதி செய்திருப்பதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. கனடா-இந்தியா இடையேயான உறவு பாதிக்கப்பட்டதற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளை கனடா கூறி வந்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டுக்கு கனடா எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. ஆதாரம் கொடுங்கள் என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்தோம்.

இப்போது கனடா பிரதமர் ட்ரூடோ அந்நாட்டில் அளித்த சாட்சியம் ஒன்றின் மூலம் ஆதாரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆணவ போக்கின் காரணமாக இந்தியா-கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டதற்கு கனடா பிரதமர் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு,"என்று கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details