தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"தக்க பதிலடி கொடுப்போம்"-பாகிஸ்தானுக்கு ஆப்கான் தாலிபான்கள் எச்சரிக்கை! - PAKISTAN AIRSTRIKES

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (Image credits-AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 23 hours ago

காபூல்:ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதி மாகாணத்தில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துககு தாலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் அளித்த பேட்டியில், "பக்திகா மாகாணத்தில் பார்மால் மாவட்டத்தில் நான்கு பகுதிகளில் பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து வெடிகுண்டுகளை வீசியிருக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,"என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், தெளிவான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இந்த கோழைத்தனமான செயலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். ஆப்கானிஸ்தான் பிரதேசத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதை உரிமையாகக் கருதுகின்றோம்," என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியிருந்தது. அப்போது அதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:தரையிறங்கும் போது வெடித்துச் சிதறிய விமானம்: 67 பேரின் நிலை என்ன?

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பார்மால் பகுதியை சேர்ந்த மலீல் என்பவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அளிதத் பேட்டியில், "வெடிகுண்டு வீச்சில் இரண்டு அல்லது மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் வீட்டில் இருந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்,"எனக் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் தாலிபான்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. பாகிஸ்தானுக்கு எதிரான போராளிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக கூறியிருக்கிறது. ஆனால், இதனை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தாலிபான் அமைப்பினர், அண்மையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் பொதுவான சித்தாந்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் மீது நடந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், "தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது,"எனக் கூறப்பட்டுள்ளது. ஜெட் விமானங்கள், ட்ரோன்களை பயன்படுத்தி இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் மேற்கொண்டதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details