தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

22 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு! - Rameswaram Fishermen arrest - RAMESWARAM FISHERMEN ARREST

RAMESHWARAM FISHER MEN ARREST: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த நிலையில், இன்று மூன்றாவது முறையாக சிறைக்காவலில் வைத்து விசாரணை செய்ய இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 3:23 PM IST

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 22ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று, சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனையடுத்து, அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, அவர்களிடம் இருந்த மூன்று விசைப்படகையும், அதிலிருந்த 22 பேரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

பின், தமிழக மீனவர்கள் 22 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மீனவர்களை ஆஜர்படுத்தப்பட்டதில், ஜூலை 18 வரை சிறைக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மூன்றாவது முறையாக மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்ற நீதிபதி, மீண்டும் ஜூலை 24ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:காவிரியில் நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி!

ABOUT THE AUTHOR

...view details