தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தமிழரான சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஒரு ஆண்டு சிறை.. பின்னணி என்ன? - One Year Jail Sentence To Iswaran - ONE YEAR JAIL SENTENCE TO ISWARAN

இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான சிங்கப்பூர் முன்னாள் அமைசர் எஸ்.ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதை அடுத்து அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்ப்பபூர் முன்னாள் அமைசர் எஸ்.ஈஸ்வரன்
சிங்ப்பபூர் முன்னாள் அமைசர் எஸ்.ஈஸ்வரன் (image credits-ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 2:46 PM IST

Updated : Oct 3, 2024, 3:15 PM IST

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தம்மீதான ஐந்து குற்றச்சாட்டுகள் மற்றும் கடந்த மாதம் 24ஆம் தேதி நீதிக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டது ஆகியவற்றை ஒப்புக்கொண்டதால் அவருக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று ஒரு ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன் தமிழராவார். சென்னையில் பிறந்த இவர் பின்னர் பெற்றோருடன் சிங்கப்பூர் சென்றார். தொடக்க காலத்தில் தொழிலதிபராக இருந்த அவர், முதன் முதலில் 1997ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். சிங்கப்பூர் நாடாளுமன்ற துணை சபாநாயகர், வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி போக்குவரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் ஊழல் நடைமுறை விசாரணை அமைப்பால் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு:முதலமைச்சரை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்!

சிங்கப்பூரில் வசிக்கும் மலேசிய தொழிலபதிபர் ஓங் பெங் செங்கிடம் இருந்து 4 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசு பொருட்களை பெற்றார் என்று ஈஸ்வரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஈஸ்வரன் மீது மொத்தம் 35 குற்றச்சாடுகள் நிலுவையில் உள்ளன. அதில் இரண்டு ஊழல் வழக்குகள் பின்னர், பொதுவாழ்க்கையில் இருப்பவர் பரிசு பெற்றார் என்ற குற்றச்சாட்டுகளாக மாற்றப்பட்டன.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் கடந்த மாதம் 24ஆம் தேதி அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவர் நீதிக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுவும் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அவருக்கு தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," 6 முதல் 7 மாதங்கள் வரை மட்டும் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை அளிக்கலாம்," என்று வாதிட்டார். ஆனால், ஆனால் நீதிபதி ஹூங், "இது போதுமானதாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவர் பொது ஊழியர் என்ற முறையில் மிகவும் உயர்ந்த பதவியை வகித்ததுள்ளார். அவர் மேற்கொண்ட குற்றச்செயலும் உயர்ந்த அளவில் உள்ளது. எனவே அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது," என்று கூறினார்.

இப்போது ஜாமீனில் உள்ள ஈஸ்வரனின் ஜாமீன் காலம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது. அவர் திங்கள் கிழமையன்று சிறையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அந்நாட்டில் அமைச்சர் பதவி வகித்த ஒருவர் இது போன்ற குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Last Updated : Oct 3, 2024, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details