ரியோ டி ஜெனிரோ/ பிரேசில்:இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் கடந்த நவம்பர். 15ஆம் தேதி இந்தியாவில் இருந்து நைஜீரியாவிற்கு புறப்பட்டார்.
முதலாவதாக வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தைகாக நவம்பர் 16, 17ஆம் தேதிகளில் நைஜீரியா சென்ற அவர்க்கு நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு சிறப்பு வரவேற்பு அளித்தார். மேலும் இந்தியவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிற்கு இந்திய தலைவர்கள் பயணம் மேற்கொண்டு 17 ஆண்டுகளான நிலையில் பிரதமரின் இந்த பயணம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அங்கு பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் தேசிய விருதான ’கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்’ (GCON) வழங்கப்பட்டது. நைஜீரியாவின் தேசிய விருதை பெற்ற முதல் வெளிநாட்டு பிரமுகர் 2ஆம் எலிசபெத் ராணி ஆவார். இந்நிலையில் தற்போது இந்த விருது இரண்டாவது வெளிநாட்டு பிரமுகரான பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தோழிகளாக சென்ற ட்ரிப்! நீச்சல் குளத்தில் மூழ்கி இளம்பெண்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம்
இந்நிலையில் இந்த பயணத்தின் அடுத்தக்கட்டமாக பிரதமர் இன்று ( நவம்பர்.18) ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் தரையிறங்கினார். இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியாதாவது, “ G20 பிரேசில் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஆவலுடன் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை அடைந்துள்ளேன். தற்போது இந்தியாவின் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற எங்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட கருத்தை பிரேசில் வளர்தெடுக்கயுள்ளது. உலக நாடுகள் இந்த G20 உச்சி மாட்டில் ரஷ்ய- உக்ரேன் போர் போன்ற நிகழ்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்க முடிவு காண நினைக்கிறேன். மேலும் உலக தலைவர்களுடன் இந்த இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள 19வது ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய ‘ட்ரொய்கா’ உறுப்பினராக கலந்து கொள்கிறது. ‘ட்ரொய்கா’ உறுப்பினர் என்றால் கடந்த, தற்போதைய, அடுத்த முறை G20 மாநாட்டை தலைமை வகித்த மற்றும் வகிக்க போகும் நாடுகள் வரிசையாகும். அதன்படி இந்திய சென்ற முறை தலைமை வகித்த நிலையில் தற்போது பிரேசில் தலைமை ஏற்றுள்ளது. அடுத்த முறை தென்னாப்பிரிக்கா தலைமை வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டை முடித்துவிட்டு மூன்றாவது கட்டமாக பிரதமர் மோடி நவம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை கயானா நாட்டின் அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். கயானா நாட்டுக்கும் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்