இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடுவது, உரையாடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் தடங்கல்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில் தேசிய பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை கடந்த பிப்ரவரி மாதம் முதல் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இடைப்பட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், அது தொடர்பாக அரசு வழங்கிய எக்ஸ் கணக்குகளை முடக்குவது மற்றும் தளத்தில் இருந்து அகற்றுவது குறித்து எக்ஸ் தளத்துடன் முரண்பாடு ஏற்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக நீதிமன்ற்த்தில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. மேலும், எக்ஸ் தளத்தை தவறான முறையில் பயன்படுத்துவது மற்றும் அதனால் நாட்டின் பாதுகாப்பு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தடை விதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.