தேனி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், காரில் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பெரியகுளம் அருகே திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில் திரும்பிச் சென்றுக் கொண்டு இருந்தனர். அப்போது காரின் முன் பக்க டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பிக்கப் வாகனத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு நபர்கள் சென்ற நிலையில், இரு சிறுவர் உட்பட ஐந்து நபர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான காரில் இருந்த பக்தர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சிறுவனின் கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்.. ஏழு தையல் போட்டு சிகிச்சை.. சென்னையில் பரபரப்பு!
இதில் வாகனத்தை வாகனத்தை ஓட்டிய நபருக்கு மட்டுமே தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற நான்கு நபர்கள் படுகாயத்துடனும், ஒரு சிறுவன் உட்பட இருவர் லேசான காயத்துடன் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்