அட்லாண்டா:அமெரிக்காவின் 39ஆவது அதிபராக பதவி வகித்த ஜிம்மி கார்டர் கடந்த ஒரு ஆண்டாகவே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ் பகுதியில் காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் போர், வாட்டர் கேட் ஊழல் என அமெரிக்காவுக்கு பின்னடைவு நேரிட்டிருந்த சமயத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளை மாளிகைக்குள் குடியேறியவர் ஜிம்மி கார்டர். 39 ஆவது அதிபராக இருந்த அவர், 29ஆம் தேதி பிற்பகல் உயிரிழந்ததாக கார்டரின் அதிகாரப்பூர்வ மையம் தெரிவித்துள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அவர் காலமானார். முதுமை காரணமாக கடந்த ஒரு ஆண்டாக வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் ஜிம்மி கார்டரின் மனைவி ரோசாலின் மறைந்தார். அமைதியான சூழலில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க ஜிம்மி கார்டர் காலமானதாக கார்டரின் மையம் தெரிவித்துள்ளது.
ஜிம்மி கார்டர் மறைவை அடுத்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உலகின் அசாதாரண தலைவராக, அரசியல்வாதியாகவும், மனிதாபிமானவாதியாகவும் திகழ்ந்தவர். மிகவும் உற்ற நண்பரான அவரை இழந்து விட்டேன்.இரக்க சிந்தனை கொண்டவராக தார்மீக ரீதியாக திகழ்ந்தவர்.