கொழும்பு (இலங்கை):கடந்த 21ஆம் தேதி மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகை சிறை பிடித்து அதிலிருந்து 37 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மீனவருடைய சிறைகாவல் முடிந்து இன்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விசாரணை நடத்திய நீதிபதி 37 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது விடுதலை செய்யப்பட்ட 37 மீனவர்களும் இன்னும் ஓரிரு தினங்களில் தாயும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 18 மற்றும் 20ஆம் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகையும், அதிலிருந்த 18 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.