தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனா உடனான உறவு எப்படி உள்ளது? ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதிர்ச்சி தகவல்! - Army Chief On Border Situation

சீனா உடனான சூழல் வலுவாக உள்ளது. ஆனால், இயல்பானதாக இல்லை. பதற்றமானதாக உள்ளது என ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறியுள்ளார்.

ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி
ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி (image credits-ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 8:19 PM IST

புதுடெல்லி:இந்தியாவின் பாதுகாப்புக்குஅச்சுறுத்தலாகசீனா திகழ்கிறதா என்று கேட்டதற்கு பதில் அளித்த ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, சீனாவுடனான சூழல் வலுவாக உள்ளது. ஆனால், இயல்பானதாக இல்லை. பதற்றமானதாக உள்ளது என்று கூறினார். எனினும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் செயல்பாடு ரீதியாக தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நில போர் ஆய்வுகள் மையம் ஒருங்கிணைத்த சாணக்கியா பாதுகாப்பு உரையாடல் நிகழ்வில் பேசிய உபேந்திரா திவேதி, சீனாவை பொறுத்தவரை , சிலகாலம் நமது எண்ணத்தில் புதிரானதாக இருக்கிறது. சீனாவுடன் நீங்கள் போட்டியிட வேண்டும், ஒத்துழைக்க வேண்டும், இணைந்து வாழ வேண்டும், எதிர்கொள்ள வேண்டும், இப்போதைய சூழல் என்னவாக இருக்கிறது? என்றால், வலுவானதாக இருக்கிறது. அது இயல்பானதாக இல்லை. பதற்றமானதாக இருக்கிறது.

2020ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். தரை ஆக்கிரமிப்பு சூழ்நிலையாக இருந்தாலும் அல்லது இருநாடுகளுக்கு இடையே உள்ள நிலப் பகுதியில் உருவாக்கப்பட்ட மண்டலங்கள் அல்லது ரோந்து ஆக இருந்தாலும், இப்போது வரை இருந்ததன் அடிப்படையில் செயல்பட முடியும். இதுவரையிலும் சூழல் திரும்ப பெறப்பட்டுள்ளது. நம்மைப் பொறுத்தவரை நிலைமை தொடர்ந்து பதற்றமாகத்தான் இருக்கிறது. எந்தவொரு தற்செயலையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்.உண்மையான கட்டுப்பாடு கோட்டு பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details