சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்குச் சென்றார். இந்த பயணமானது 17 நாட்கள் இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இப்பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் கடந்த 29ஆம் தேதி அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை அடுத்து, கடந்த 30ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இவைகளின் தொடர்ச்சியாக, நேற்று (ஆக.31) சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane) எலக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்யும் நிறுவனமான ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சந்திப்பு: இதற்கிடையே, சான்பிரான்சிஸ்கோவில் நேற்று (ஆக.31) நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும், அது இந்தியர்கள் இல்லாத நாடாக இருக்காது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய நாடாக உள்ளது.