இஸ்லாமாபாத்:எல்லையில் தீவிரவாதம், பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை வர்த்தகம், எரிசக்தி புழக்கம், பரஸ்பரம் தொடர்பு ஆகியவற்றை ஊக்குவிக்க முடியாது. பரஸ்பரம் கூட்டு முயற்சியுடன் மட்டுமே வளங்கள், முதலீடு புழக்கத்தை ஊக்குவிக்க முடியும் என்று என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகருக்கு நேற்று சென்றார். அங்கு அவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் தெற்கு ஆசியாவுக்கான இயக்குநர் ஜெனரல் இல்யாஸ் மெஹ்மூத் நிஜாமி வரவேற்றார். பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஷரீப் அளித்த இரவு விருந்தில் அவர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 23ஆவது கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,"தற்போதைய காலகட்டத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம்,பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதே சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். இதில் நேர்மையான உரையாடல்கள், பரஸ்பர நம்பிக்கை, நல்ல நட்புணர்வுடன் கூடிய அண்டைநாடுகள், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆவணத்துக்கான பொறுப்புடைமையை மீண்டும் உறுதி செய்தல் ஆகியவை தேவை. மூன்று தீமைகளுக்கு எதிராக சமரசமின்றி சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுதியோடு திகழ வேண்டும்.