டெல்லி : ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமகா மத்திய கிழக்கு நாடுகள் பதற்றம் அடைந்து உள்ளன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் சென்ற இஸ்ரேல் தொடர்புடைய 'MSC Aries' சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியது. இந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் மாலுமிகளாக பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், சரக்கு கப்பலில் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரக்கு கப்பலிலுள்ள இந்தியர்களுக்கு நிவாரணம், முன்கூட்டியே விடுதலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தெஹ்ரான் மற்றும் டெல்லி உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.