யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் உள்ள பியூரின்களின் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனமாகும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருள். இது பொதுவாக சிறுநீர் வழியாக வெளியேறும். ஆனால், சிறுநீரின் வழியாக யூரிக் அமிலம் வெளியேறாத போது உடலில் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது. இந்த நிலை 'ஹைப்பர்யூரிசிமியா' (Hyperuricemia) என்று அழைக்கப்படுகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் வீக்கம், வலி, மூட்டுப் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனைக் குறைக்க பல வகையான மருந்துகள் கிடைத்தாலும், சில உணவுகள் மூலம் இயற்கையாகவே யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கலாம். அந்த வகையில், குளிர்காலத்தில் அதிக விளைச்சல் செய்யப்படும் முள்ளங்கி, அதிகரித்த யூரிக் அமிலத்தை குறைக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்..
யூரிக் அமிலம் அதிகரித்தால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற உணவு முறை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், குளிர்காலத்தில் விளையக்கூடிய காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக குளிர்காலங்களில் விளையக்கூடிய முள்ளங்கி யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதாக அய்வு தெரிவித்துள்ளது.
உடலில், யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது எலும்புகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை, கடுமையான மூட்டுவலிக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக குளிர்காலங்களில் இந்த வலி அதிகமாகும். இந்நிலையில், முள்ளங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து நிவாரணம் அளிப்பதாக சயின்ஸ் டைரக்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முள்ளங்கியில் உள்ள உயிர்வேதியியல் கலவைகள் பியூரின்கைன் உற்பத்தியை தடுக்கிறது. இதனால், யூரிக் அமில கட்டிகளை அகற்ற உதவியாக இருக்கிறது. இது தவிர, முள்ளங்கியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை பயக்குகிறது.