குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இது ஒரு சுத்தமற்ற, சுகாதாரமற்ற செயலாக நமக்கு தோன்றினாலும், உண்மையில் இப்படி செய்தால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்ன நன்மை இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.. ஒரு சர்வதேச அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் 58% மக்கள் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல, பிரிட்டனில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் குளியலறையில் சிறுநீர் கழிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
தண்ணீர் சேமிப்பு?: குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது தண்ணீரை மிச்சப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம், சிறுநீர் கழித்த பின் செய்யப்படும் ஒரு ஃப்ளஷிற்கு (Flush) தற்போது 3 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே தேவைப்படுகிறது என்று கூறுகிறது. அதே பழையகால கழிப்பறையாக இருந்தால் ஒரு ஃப்ளஷிற்கு குறைந்தது 10 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் 350 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே, குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால் ஃப்ளஷ் செய்வது தவிர்க்கப்பட்டு தண்ணீர் மிச்சப்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்கின்றனர்.
குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று 2018ம் ஆண்டு Journal of Environmental Health இதழில் வெளியான "The Hygiene of Urination" என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் நிகேத் சோன்பால் வலியுறுத்துகிறார். சிறுநீர்ப்பை தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது, மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.