தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இரும்புச்சத்து அதிகரிக்க இந்த சப்பாத்தியை சாப்பிட்டு பாருங்கள்..பயன்கள் ஏராளம்! - HEALTH BENEFITS OF BEETROOT

வாரத்திற்கு இரண்டு முதல் 3 முறை பீட்ரூட் சப்பாத்தியை எடுத்துக்கொள்வதால் இரத்த சோகை பிரச்சனை நீங்குகிறது. இந்நிலையில், பீட்ரூட்டை வைத்து எப்படி சுவையான சப்பாத்தி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Health Team

Published : Nov 5, 2024, 11:21 AM IST

இட்லி, தோசை, சப்பாத்தி என வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகளை சிறிது மாற்றம் செய்து சாப்பிட்டாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்கின்றனர். அந்த வகையில், வழக்கமான சப்பாத்தியை தவிர்த்து, கோதுமை மாவில் கொஞ்சம் பீட்ரூட் கலந்து சாப்பிட்டால் சுவைக்கு சுவையும், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்கின்றனர். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் - 1
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • கோதுமை மாவு - 1 கப்
  • ஓமம் - அரை டீஸ்பூன்
  • உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் பீட்ரூட், சோம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
  • இப்போது , ஒரு அகல பாத்திரத்தில், ஓமம், கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், வடிகட்டிய சாறு மற்றும் தேவைப்பாட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து விடுங்கள்.
  • பின்னர், மாவை சப்பாத்தியாக திரட்டி தோசைக்கல்லில் இரண்டி பக்கமும் வேக வைத்து எடுத்தால் சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி ரெடி.
  • பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?:

  1. உடலுக்குத் தேவையான வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது பீட்ரூட்.
  2. பீட்ரூட்டில் உள்ள பீட்டா சையனின் மூளையில் உள்ள நரம்புகளை தளர்த்தி புத்துணர்வைக் கொடுக்கும்.
  3. பீட்ரூட் உடலில் உள்ள இரத்த செற்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதே போல, பீட்ரூடில் அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகையையும் நீக்குகிறது.
  4. பீட்ரூட்டை எடுத்துக்கொள்வதால் நிம்மதியான தூக்கம் ஏற்படும் என்கிறது ஆய்வு. இதில் உள்ள வேதிப்பொருள் மூளையில் உள்ள நரம்புகளைத் தளர்த்தி இரவில் நல்ல தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள ஃபோலேட் நல்ல மனநிலையை ஏற்படுத்த உதவுகிறது.
  5. இரத்த கொதிப்பு உள்ளவர்கள், பீட்ரூட்டைச் சாப்பிட்டு வருவதால் நாள்பட இரத்த கொதிப்பு குறைகிறது.
  6. இதயக் குழாயில் அடைப்பு மற்றும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மருந்தாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க:

சப்பாத்தி சூப்பர் சாப்டாக வர மாவை இப்படி பிசைந்து பாருங்க..அசந்து போய்ருவீங்க!

கோதுமை மாவுடன் 'இந்த' மாவை சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள்.. கொழுப்பு தானாக கரையும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details