தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

பிரேக்ஃபாஸ்ட் செய்ய நேரமில்லையா? 5 நிமிடத்தில் தயாராகும் 'இன்ஸ்டண்ட் தோசை-ஐ' ட்ரை பண்ணுங்க! - EASY BREAKFAST RECIPE - EASY BREAKFAST RECIPE

EASY BREAKFAST RECIPE: வெறும் 5 நிமிடங்களில் சுடச்சுட டேஸ்டியான தோசையை செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? சில்லி ஃப்ளேக்ஸ் போட்டு செய்யக்கூடிய ஈஸியான தோசை ரெசிபியை செய்து பாருங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

By ETV Bharat Health Team

Published : Sep 24, 2024, 5:12 PM IST

பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில், காலை நேரம் இல்லாத காரணத்தினாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ பலர் ஹோட்டல்களிலும் டிபன் சென்டர்களிலும் காலை உணவை சாப்பிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்த இன்ஸ்டன்ட் தோசை. இதை 5 முதல் 10 நிமிடங்களில் சுலபமாக வீட்டிலேயே தயார் செய்து விடலாம். சுவையும் அட்டகாசமாக இருக்கும். இந்த இன்ஸ்டன்ட் தோசையை செய்ய தேவையான பொருட்கள் என்ன? எப்படி செய்வது? என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - 1
  • சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

  • இதற்கு முதலில் பச்சை மிளகாயை குட்டி குட்டியாக நறுக்கவும். அப்புறம் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு, சீரகம், மிளகுத்தூள், நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி,பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ் என...ஒவ்வொன்றாக சேர்த்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அதன் பிறகு இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். தண்ணீயாக கலந்து விடாதீர்கள்.
  • அதன் பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடாகியதும், கலந்து வைத்த மாவை எடுத்து தோசை போல் பரப்பவும்
  • இந்த தோசை ஒல்லியாக இருந்தால சரியாக வராது. எனவே இது சற்று தடிமனாக இருக்க வேண்டும். இருப்பினும், அதிக மாவை ஊற்ற வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
  • இவ்வாறு ஊற்றி, அதன் மீதும் அதைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் தடவ வேண்டும்.இந்த ரெசிபியை குழந்தைகளுக்காக செய்தால் எண்ணெய்க்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தலாம். அப்போது தோசை இன்னும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • இப்போது மிதமான தீயில் அடுப்பை வைத்து தோசையை ஒரு பக்கம் நன்றாக வேக விடவும். அப்புறம் மறுபக்கம் திருப்பி போட்டு சர்வ் செய்யுங்கள். அவ்வளவுதான்.. மிகவும் சுவையான "இன்ஸ்டன்ட் தோசை" ரெடி!
  • இந்த தோசையை தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு சட்னி போன்ற புளிப்பு சுவை நிறைந்த சட்னியுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். காலையில் என்ன செய்வது என்று தெரியாத போது, ​​இந்த தோசைகள் செய்து அசத்துங்கள்

இதையும் படிங்க:

  1. மாவு அரைக்காமல் 'Instant' ராகி இட்லி செய்யலாமா? வெறும் 20 நிமிடம் போதும்!
  2. திரும்பத் திரும்ப சாப்பிடத் தோன்றும் ஸ்பானிஷ் ஆம்லெட்..ஈஸியா செய்வது எப்படி?

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details