தமிழ்நாடு

tamil nadu

நடப்பாண்டில் மட்டும் 13 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்! - Zika virus in India

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 7:53 PM IST

Zika virus in India: இந்த ஆண்டில் மட்டும் ஜிகா வைரஸின் பாதிப்பு அதிகப்படியாக மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவில் மூவர் என 13 பேர் பாதிக்கப்படுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

ஜிகா வைரஸ் சோதனை பணிகள்
ஜிகா வைரஸ் சோதனை பணிகள் (Credits - ETV Bharat)

டெல்லி: ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஜிகா என்றழைக்கப்படுகிறது. இந்த நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், இதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் மைக்ரோசெபாலி (தலையின் அளவு குறைவாக காணப்படுதல்) பாதிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் போது, இந்தியா முழுவதும் சுகாதார பாதுகாப்பு வழங்குவதன் பொறுப்பு மாநில அரசுகளிடமே இருப்பதாக பேசினார். மேலும், நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சம் வழங்கி வருதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கென தேவைக்கேற்ப தனி படுக்கைகள் ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மத்திய அரசு சார்பில் ஜிகா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு செயல் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன" என பேசினார்.

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை ஜிகா வைரஸ் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஜிகா வைரஸின் பாதிப்பு முதன்முதலின் பதிவானது. அதனை அடுத்து, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் ஜிகா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் பதிவாகின.

அந்த வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத்தில் மூவரும், தமிழகத்தில் ஒருவரும் என ஜிகா வைரஸின் பாதிப்புக்கு ஆளானார்கள். அதனைத் தொடர்ந்து, 2018-ல் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 260 பேரும், 2021ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் 84 பேரும், கேரளாவில் 150 பேரும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த ஆண்டு கேரளாவில் 12 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேருக்கு ஜிகா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக, நடப்பாண்டில் தற்போது வரை 13 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 10 பேரும், கர்நாடகாவில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஜிகா வைரஸால் ஏற்படும் நோய், கருவில் இருக்கும் சிசுக்களுக்கு மைக்ரோசெபலி மற்றும் நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்படும் என்பதால், கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சிகிச்சை அளித்து, கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என கூறியுள்ளது.

மேலும், சரியான நேரத்தில் நோய் பரவலைக் கண்டறிந்து கட்டுப்படுத்த மாநில அரசுகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து உபகரணங்களும் இருப்பதை உறுதி செய்யும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) மற்றும் தேசிய நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு மையம் (NCVBDC) ஆகியவற்றில் தகவகல் தெரிவிக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கேரளா முதல் குவஹாத்தி வரை... இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த மோசமான நிலச்சரிவுகள்!

ABOUT THE AUTHOR

...view details