உணவுகளில் நறுமனத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில், எண்ணற்ற நன்மைகள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும், பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றால் நம்பமுடிகிறதா? தினசரி வெறும் வயிற்றில் பூண்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
இரத்த அழுத்தம்: நாள்பட்ட இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில் 2 பல் பூண்டினை சாப்பிட்டு வர, நரம்புகள் வழுவடைந்து நரம்புகள் சுருங்கி விரிவது சீராக்கப்படும். இதன் மூலமாக இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
வயிற்று பிரச்சனை நீங்கும்:காலை வெறும் வயிற்றில் பூண்டினை பச்சையாக சாப்பிட்டு வர கல்லீரல் சீராக செயல்படும். இதனால் உணவு செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரக்கப்பட்டு, செரிமானம் சீராக நடைபெறுவதோடு அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
மன அழுத்தம் கட்டுப்படும்: பச்சை பூண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக வேலை பளுவில் இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
இதயநோய்: தினசரி பச்சை பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது, பூண்டின் மூலப்பொருட்கள் இருதய சுவர்களுக்கு அதிக பலன்களை கொடுக்கும். இதனால், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்கும்.
உடலை சுத்தப்படுத்தும்: வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவற்றை வெளியேற்ற தினமும், ஒரு பச்சை பூண்டை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு புழுக்களும் வெளியேறும்.