நடுத்தர வயதை எட்டுவதற்குள் குடும்ப பொறுப்பு, பணிச்சூழல், பொருளாதாரம் என நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும். ஆனால், அப்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சவாலானதாக மாறிவிடும். குறிப்பாக, 30 வயதிற்கு பிறகு வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஏற்ப வேகமாக ஓட தொடங்கும் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. இந்த நிலையில், 30 வயதுக்கு பிறகு உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. படிந்து பயன்பெறுங்கள்..
நார்ச்சத்து உணவு:30 வயதுக்கு பிறகு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். வயதாகும் தொடங்கும் போது வளர்சிதை மாற்றம் குறைவதால் இந்த உணவுகள் மூலம் ஊட்டச்சத்துக்களை பெறலாம். ஓட்ஸ், பேரிக்காய், பயறு வகைகள் மற்றுல் கீரைகளில் நார்ச்சத்து நல்ல அளவில் உள்ளது. இதய நோய், பக்கவாதம், டைப் 2 நிரிழிவு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்க நார்ச்சத்து உட்கொள்வது அவசியம். அதே சமயத்தில், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் இவை உதவுகிறது.
கால்சியம் மற்றும் ஒமேகா 3 உட்கொள்வது: 35 வயதிற்குப் பிறகு எலும்பு அடர்த்தி குறைவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். எனவே, போதுமான கால்சியம் உட்கொள்வது உங்கள் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்தில் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான ஒரு நல்ல அணுகுமுறையாகும். குறிப்பாக, 30 வயதிற்கும் அதிகமான பெண்களின் எலும்பு வலிமையை பராமரிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம்.
அதே போல், இருதய நோய் மற்றும் மூளை ஆரோக்கியத்தின் அபாயத்தைக் குறைக்க ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ள ஊட்டச்சத்து உணவுகள் மனநிலையை அதிகரிக்கும்.
சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுங்கள்:ஆரோக்கியமான ஹார்மோன் நிலையைப் பராமரிக்க சீரான உணவை உண்ண வேண்டும். பெண்கள் வயதாகும்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கர்ப்பம் தொடர்பான பிற கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.