தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கோட் படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த குண்டூர் காரம் நடிகை ஸ்ரீ லீலா! என்ன காரணம் தெரியுமா? - Actress Sreleela rejects Goat movie - ACTRESS SRELEELA REJECTS GOAT MOVIE

தி கோட் படத்தில் நடிகர் விஜயுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 6:28 PM IST

மும்பை: தி கோட் படத்தில் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் விஜய்யோடு இணைந்து தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவை ஆட வைக்க படக்குழு அவரை அணுகியதாக கூறப்படுகிறது. இதில், தமிழில் முதல் முறையாக அறிமுகமாவது என்பதால் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்று கருதி அந்த வாய்ப்பை ஸ்ரீ லீலா நிராகரித்ததாக தகவல் கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் 68வது படமான தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். அண்மையில் கோட் படத்தின் விசில் போடு பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பரவி கலவையான விமர்சனங்களை பெற்றது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தவிர்த்து மறைந்த நடிகர் விஜயகாந்தை இந்த படத்தில் ஏஐ தொழில்நுடபத்தின் மூலம் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. இது தவிர கோட் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், சிநேகா, லைலா, அமீர் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.

யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் தான் கோட் படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவை படக்குழு அணுகி உள்ளது. தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக விரும்புவதால் அதை தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் நடித்தவர் தான் இந்த ஸ்ரீலீலா. கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் ரவிதேஜா, ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான தமாகா, அதைத் தொடர்ந்து ஸ்கந்தா ஆகிய படங்களில் ஸ்ரீலீலா நடித்து பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.

தமிழ் படங்களில் இதுவரை அவர் நடித்திராத நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழிலும் அவர் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துடன், ஸ்ரீலீலா நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோட் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியீடு - ரகசியம் உடைத்த வெங்கட் பிரபு! - Goat Second Single Release Date

ABOUT THE AUTHOR

...view details