தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எக்கனாமி வகுப்பில் பயணித்த ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்! - வேட்டையன்

கடப்பாவிலிருந்து ஒரே விமானத்தில் குறைந்த கட்டண வகுப்பில் பயணித்த போது நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை ஜீவா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துடன் விமானத்தில் குறைந்த கட்டண வகுப்பில் பயணித்த ஜீவா
நடிகர் ரஜினிகாந்துடன் விமானத்தில் குறைந்த கட்டண வகுப்பில் பயணித்த ஜீவா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 5:50 PM IST

ஹைதராபாத்: நடிகர் ரஜினிகாந்த் ஆந்திரா மாநிலம் கடப்பாவிலிருந்து விமானத்தில் குறைந்த கட்டண வகுப்பில் பயணித்துள்ளார். அப்போது அதே விமானத்தில் பயணித்த நடிகர் ஜீவாவை சந்தித்துள்ளார். ரஜினியை சந்தித்த உற்சாகத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜீவா ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் உயரமாக பறந்து கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். நடிகர் ஜீவா தெலுங்கில் யாத்ரா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். யாத்ரா 2 திரைப்படம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சுயசரிதை திரைப்படமாகும். யாத்ரா முதல் பாகத்தில் ராஜ சேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த் கடைசியாக சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விமான பயணத்தில் ரஜினிகாந்த் போன்ற விஐபிக்கள் பிசினஸ் வகுப்பிலேயே பயணிக்கும் நிலையில், சாதாரணமாக எக்கனாமி வகுப்பில் பயணித்து வந்ததை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹாலிவுட்டில் ரீமேக்காகும் "த்ரிஷ்யம்" படம் - முதல் இந்திய படம் என சிறப்பு!

ABOUT THE AUTHOR

...view details