தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்".. தி கோட் படத்தின் 3வது சிங்கிள் வெளியானது! - THE GOAT 3RD SINGLE OUT - THE GOAT 3RD SINGLE OUT

The Greatest of All time: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தின் மூன்றாவது பாடலான SPARK வெளியானது.

கோட் போஸ்டர்கள்
கோட் போஸ்டர்கள் (Credits - archana kalpathi X Page)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 3, 2024, 6:18 PM IST

சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோட் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான SPARK நாளை வெளியாகும் என நேற்று ப்ரோமோ மூலம் படக்குழு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக.3) முழுப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பாடகர் விருஷா பாலு பாடியுள்ளனர். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதி உள்ளார். தற்போது இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலுக்கான நடன இயக்குநர் ராஜு சுந்தரம், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளராக சித்தார்த் நுனி, எடிட்டிங் பணிகளை வெங்கட் ராஜன், புரோடக்சன் டிசைனர் ராஜீவன் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

முன்னதாக, படத்தில் இருந்து 'விசில் போடு', 'சின்ன சின்ன கண்கள்' ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க:தீபாவளி ரேஸில் எஸ்கே உடன் போட்டியிடும் ஜெயம் ரவி.. பிரதர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Brother movie release date

ABOUT THE AUTHOR

...view details