சென்னை:பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம், விஸ்டாஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் J. பேபி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பேசுகையில், “மங்காத்தா எடுக்கும் பொழுது தான் அட்டக்கத்தி படத்திற்கான ஷூட்டிங் போய் கொண்டு இருந்தது. அப்போது வெற்றிமாறனை அழைத்து அட்டகத்தி படத்தை பார்க்க வைத்தோம், ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார். இது தான் ஞானவேல் ராஜா அப்படத்தை வெளியிடுவதற்கான முதல் காரணமாக அமைந்தது.
பா.ரஞ்சித்தும் VP boys உடன் சேர்ந்தவர் தான். நாங்க சென்னை 28 படத்திற்கு பிறகு தான் குடும்பமாக ஆனோம். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கொண்டாடுவது பெருமையாக இருக்கிறது. இதன் மூலம், தமிழ்நாடு மக்களுக்கு மொழி முக்கியம் இல்ல கன்டன்ட் தான் முக்கியம் என்று நினைக்கிறது தெரிகிறது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கொண்டாடுவது சந்தோசமாக உள்ளது. தனி ஒருவனாக இருந்து தனி உலகத்தையே உருவாக்கி கொண்டு இருக்கிறார் வெறும் கதையை நம்பி மட்டும் படம் எடுக்கிறார். இப்படி கதையை நம்பி மட்டும் படம் எடுக்கிறது சந்தோசமாக உள்ளது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “ கோட் (G.O.A.T) படத்தின் அப்டேட்ஸ் கொடுக்க கூடாது என நினிக்கவில்லை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக திட்டுகிறார்கள். கொஞ்சம் பெருமையாக இருங்கள். சரியான நேரத்தில் எப்போது வர வேண்டுமோ வரும். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான படம், கிராபிக்ஸ் தொடர்பான வேலைகள் நிறைய உள்ளன.