தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளிநாடுகளில் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைக்கும் கோட்; இன்று மாலை ஸ்பெஷல் ப்ரோமோ வெளியீடு! - GOAT special promo - GOAT SPECIAL PROMO

GOAT Advance booking: 'கோட்' திரைப்படம் முன்பதிவில் வெளிநாடுகளில் சாதனை படைத்து வரும் நிலையில், இன்று மாலை படக்குழு ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றை வெளியிடுகிறது.

கோட் போஸ்டர்
கோட் போஸ்டர் (Credits - AGS Entertainment)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 4, 2024, 4:27 PM IST

சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 'கோட்' படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் கோட் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவு உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி, இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவில், இப்படத்தினை அமெரிக்காவில் 1700 திரைகளில் வெளியிடுகிறது.

கோட் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. வெளிநாடுகளில் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோட் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் இன்று மாலை ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றை வெளியிடுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாலு மகேந்திரா அன்று கூறியது.. வெற்றிமாறனின் திருப்புமுனையும், திகட்டாத திரைப்படங்களும்! - vetrimaaran birthday

ABOUT THE AUTHOR

...view details