சென்னை :புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசின் சார்பில் சீகல்ஸ் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உணவகத்தை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இது அரசு சொத்து என்று கூறியுள்ளார். மேலும், அவற்றை ஒப்பந்த அடிப்படையிலும் தர முடியாது என்றும் மறுத்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் ஒரு முட்டாள்தனமான செய்தியை தெளிவுபடுத்துவதற்காக இந்த பதிவை பதிவிடுகிறேன்.
என்னுடைய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்துக்கு ஷூட்டிங் பெர்மிஷன் வாங்க பாண்டிச்சேரிக்கு ஏர்போர்ட் பார்க்க போயிருந்தேன். மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இதையும் படிங்க :விக்கி-நயன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்! தனுஷ் வழக்கில் ஐகோர்ட் அதிரடி!
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த உள்ளூர் மேலாளர் எனது சந்திப்பிற்குப் பிறகு அவரிடம் ஏதோ ஒன்றைப் பற்றி விசாரித்தார். அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல் மீம்ஸ் உருவாக்கியது மிகவும் வேடிக்கையானவை; ஆனால் தேவையற்றவை" என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் தனுஷுடன் NOC பிரச்னையில் மோதல் ஏற்பட்டு , தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழக்கில், வருகிற ஜனவரி 8 ஆம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.