தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நெல்லையில் யாகம் நடத்தி வேட்டையனை வரவேற்ற ரஜினி ரசிகர்கள்!

நெல்லையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன்(Vettaiyan) திரைப்படத்தை கொண்டாடாடும் விதமாக அவரது ரசிகர்கள் யாகம் நடத்தினர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 4:28 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

நெல்லை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படமான 'வேட்டையன்' இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நெல்லை சந்திப்பு ராம் சினிமா திரையரங்கில் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி மகிழ்தனர். அதிகாலை முதலே திரையரங்கில் குவிந்த ரஜினி ரசிகர்கள் திரையரங்கு முன்பு ரஜினிகாந்த் பூரண உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினர்.

நெல்லை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் (Credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:'வேட்டையன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடிய தனுஷ், அனிருத்!

அதனைத் தொடர்ந்து திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே இசைக்கு ஏற்ப ரஜினிகாந்த் பாடல்கள் ஒலிக்கச் செய்து ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடியதோடு தியேட்டருக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details