சென்னை:தெருக்குரல் அறிவுவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ முதல் பாகம் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித், ராப் பாடகர் அறிவு, இசையமைப்பாளர் இமான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் இமான், “தெருக்குரல் அறிவு என்பதை மாற்றும் நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு பாடலும் நன்றாக இருந்தது. நேற்று போன் பண்ணி சொந்த அண்ணணாக கேட்கிறேன். வாருங்கள் என்று சொன்னார். அதற்காக வந்து விட்டேன்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடகர் அறிவு, “ஆண்டாண்டு காலமாக சாதி எப்படி, இங்கிருக்கும் மனிதர்களிடம் உழைப்பை வாங்கி அந்த மனிதர்களை புறந்தள்ளியதோ, அதே மாதிரி இந்த இசையும் பண்பாடும் எளிய மக்களின் வாழ்வியலையும், விழுமியங்களையும் புறந்தள்ளுகிறது. நாம் வேரற்ற மனிதர்களானால் எளிதில் வெட்டி வீழ்த்தப்படுவோம். எனக்கு இந்த அனுபவம் இருந்தது என்ஜாய் என்ஜாமி பாடலை பாடும் போது நான் பேச நினைத்தது எனக்கு பிரச்சினையாக இருந்தது.