சென்னை: நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் ஆகியோர் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை மற்றும் தற்காலிக படப்பிடிப்பு நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
அக்கூட்டத்தில், நடிகர்களின் சம்பளம் குறைப்பு மற்றும் திரைப்படங்களின் தயாரிப்புச் செலவைக் குறைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர். மேலும், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் விஷயங்களுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும், வரும் 16ஆம் தேதியிலிருந்து புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்குவதில்லை என்றும், தற்போது தொடங்கி நடைபெற்று வரும் படங்களின் வேலைகளை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறி இருந்தனர். இதுகுறித்தும் நாளை நடைபெறவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வெளியிட்ட அறிக்கையில் முக்கிய தீர்மானமாக நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள திடீர் கட்டுப்பாடு; விஷாலை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படங்களுக்கும் சிக்கல்? - dhanush new movie restrictions