சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வசூல் மன்னனாக வலம் வருபவர் பிரபாஸ் இவர் கடைசியாக நடித்த சலார், கல்கி 2898AD ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. கல்கி 2898AD திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது பிரபாஸ் ’ராஜா சாப்’ (raja saab) என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ் தனது 25வது படத்தில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் 'spirit' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் ஜோடி சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக spirit படத்தில் கொரியன் நடிகர் மா டொங் சியோக் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சந்தீப் ரெட்டி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஹீரோ அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் அனிமல் (animal) படத்தில் பாபி தியோலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.