தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரபாஸ் படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நயன்தாரா? - NAYANTHARA IN PRABHAS MOVIE

Nayanthara in prabhas movie: பிரபாஸ் நடித்து வரும் ’தி ராஜா சாப்’ படத்தில் நடிகை நயன்தாரா ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடவுள்ள நயன்தாரா
பிரபாஸ் படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடவுள்ள நயன்தாரா (Credits - Film poster, nayanthara Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

சென்னை: பிரபாஸ் நடிக்கும் ’தி ராஜா சாப்’ படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நயன்தாரா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகைகள் பலர் மற்ற நடிகர்களின் படங்களில் ஸ்பெஷல் பாடல்களில் நடனமாடுவது வழக்கம். அந்த வகையில் தெலுங்கு படங்களில் அதிக பாடல்கள் வெளியாகியுள்ளது.

புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஆடிய ஸ்பெஷல் பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தில் ஸ்ரீலீலா ஆடிய ’kissik’ பாடல் பெரும் ஹிட்டானது. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய ’காவாலா’ பாடலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் ’தி ராஜா சாப்’ (The Raja Saab) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாரா ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா முன்னதாக ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் ஆகிய படங்களில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதையும் படிங்க:2024இல் விவாகரத்தை அறிவித்து ரசிகர்களுக்கு ’ஷாக்’ கொடுத்த திரை பிரபலங்கள்! - TAMIL CINEMA DIVORCE 2024

நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், ராக்காயி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா வாழ்க்கை குறித்த ஆவணப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் பட காட்சியை பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாரா, தனுஷை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details