தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வேட்டையன்' டீசரில் ட்ரோல் செய்யப்பட்ட அமிதாப் குரல்... படக்குழு எடுத்த அதிரடி முடிவு! - Amitabh bachchan voice in vettaiyan

Amitabh bachchan voice through AI in vettaiyan: வேட்டையன் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவரது குரலை தமிழில் ஏஐ(AI) தொழில்நுட்பம் மூலம் படக்குழு பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வேட்டையன் படத்தில் ஏஐ மூமல் அமிதாப் குரல்
வேட்டையன் படத்தில் ஏஐ மூமல் அமிதாப் குரல் (Credits - @LycaProductions X account)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 1:00 PM IST

சென்னை: லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் சமூக நீதி கருத்துகளை மையமாக கொண்ட படமான ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுடன் கூட்டணி அமைத்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த படம் அறிவிக்கப்பட்டது முதல் படக்குழுவினர் பெரிதாக அப்டேட் வெளியிடாமல் அமைதி காத்து வந்தனர். ஆனால் சில வாரங்களுக்கு முன் வெளியான வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத்தொடர்ந்து வெளியான படத்தின் டீசர் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் ரஜினிகாந்தின் கமர்ஷியல் படமாக இல்லாமல் வேட்டையன் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என டீசர் மூலம் தெரிய வந்தது. இப்படம் போலீசார் என்கவுண்டர் கொலையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்டையன் டீசரில் அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் டப்பிங் கொடுத்திருந்தார். இந்த குரல் அமிதாப் பச்சனுக்கு ஏற்புடையதாக இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர்.

இதையும் படிங்க:”தமிழ்நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவது சீரியஸான விஷயம்”... 'லப்பர் பந்து' நாயகி சுவாசிகா! - Lubber pandhu actress swasika

இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டு வேட்டையன் படக்குழு அமிதாப் பச்சன் குரலை ஏஐ(AI) மூலம் தமிழில் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலில் ஏஐ மூலம் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான ’கோட்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக சினிமாக்களில் ஏஐ தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details