தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”தாயே எந்தன் மகளாய் மாற”... சினேகன், கன்னிகா தம்பதிக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்! - LYRICIST SNEHAN KANNIKA

Lyricist Snehan kannika: பிரபல பாடலாசிரியர் சினேகன், கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

சினேகன், கன்னிகா
சினேகன், கன்னிகா (Credits - Kannika Snekan Instagram account)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 31, 2025, 3:19 PM IST

சென்னை: பிரபல பாடலாசிரியர் சினேகன், கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பிரபல பாடலாசிரியர் சினேகன் 1997ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். பின்னர் 2001இல் வெளியான 'பாண்டவர் பூமி' படத்தில் சினேகன் எழுதிய பாடல்கள் "அவரவர் வாழ்க்கையில்", "தோழா தோழா" ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது.

இதனைத்தொடர்ந்து 'மௌனம் பேசியதே' படத்தில் "ஆடாத ஆட்டமெல்லாம்", 'சாமி' படத்தில் "கல்யாணம் தான் கட்டிகிட்டு", 'ஆட்டோகிராஃப்' படத்தில் "ஞாபகம் வருதே" உள்ளிட்ட பாடல்கள், 'ராம்' படத்தில் "ஆராரிராரோ", 'ஆடுகளம்' படத்தில் "யாத்தே" உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் சினேகன் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார். முதல் பிக்பாஸ் சீசனில் சினேகன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

இதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதி, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: "சினிமாவிற்கும், சூதாட்டத்திற்கும் ஒரே வரி விதிப்பது தவறு" - மத்திய பட்ஜெட் குறித்து விஷால் பேட்டி! - ACTOR VISHAL ABOUT UNION BUDGET

இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன், கன்னிகா ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை தம்பதிகளாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். சினேகன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற " என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும், மகளே எந்தன் தாயாகவும்,

இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள். இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details