தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"பத்து பாடல் எழுதிவிட்டு செத்துப் போகலாம் என்று சினிமாவிற்கு வந்தேன்" - சினேகன் பேச்சு! - நினைவெல்லாம் நீயடா

Ninaivellam Neeyada: ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நினைவெல்லாம் நீயடா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பத்து பாடல் எழுதிவிட்டு செத்துப் போகலாம் என்று சினிமாவிற்கு வந்தவன் என கவிஞர் சிநேகன் பேசியுள்ளார்.

Ninaivellam Neeyada
நினைவெல்லாம் நீயடா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 1:13 PM IST

Updated : Feb 8, 2024, 2:26 PM IST

சென்னை: ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நினைவெல்லாம் நீயடா'. இப்படம் இளையராஜா இசை அமைத்துள்ள 1,417வது படம் ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (பிப்.6) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி‌.உதயகுமார், ப்ரஜன், கேயார், சிநேகன், பேரரசு, கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ஆர்.வி உதயகுமார், "இன்றைக்கு வார்த்தைகளை வைத்து அரசியல் கட்சி துவங்கி விடுகிறார்கள். விஜயைத் தொடர்ந்து எல்லா நடிகர்களும் ஒவ்வொரு கட்சி துவங்கினால் நன்றாக இருக்கும். கமல் துவங்கி விட்டார். நிறைய அரசியல்வாதிகளுக்கு நாம் தேவைப்படுவோம். பல பேருக்கும், கலைஞர்களுக்கும் வேலை கிடைக்கும். நமக்கும் ஏதாவது வேலை கிடைக்கும். கொஞ்ச நாள் சினிமாவை விட்டு இதில் இறங்கினால் ,ஏதாவது வேலை கிடைக்குமே. பேசினால் கன்டென்ட் கிடைக்குமே.

மேலும், நிறைய நடிகைகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு வருவது இல்லை. யார் வரவில்லையோ, அவர்களைத் தவிர்த்து விமர்சனம் எழுதுங்கள். அந்த நிலையில் இருக்கிறது தமிழ் சினிமா. தயவுசெய்து இது போன்ற இசை வெளியீட்டு விழாவுக்கு அடிக்கடி என்னை அழைப்பதைத் தவிருங்கள். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான விஷயங்களைப் பேச வேண்டியதாக இருக்கிறது" என்றும் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்.

பின்னர் மேடையில் பேசிய பாடலாசிரியர் சினேகன், "இது மிக முக்கியமான மேடை. இசைஞானி இளையராஜா இங்கு வந்து அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், காலத்தின் கட்டாயத்தால் அவர் அந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் 3 பாடல் எழுதியிருக்கிறேன்.

நான் இதுவரை 3,000 பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதில் 500 பாடலாவது சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். அதை விமர்சனம் செய்ய முன்வராத சமூகம், சில கமர்ஷியல் பாடல்களை விமர்சிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நான் கதைக்குப் பாடல் எழுதத்தான் சினிமாவுக்கு ஓடி வந்தேன்.

ஆனால், இந்த சினிமா என்னை சதைக்கு பாடல் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டையார் மாதிரி பத்து பாடல் எழுதி விட்டுச் செத்துப் போகலாம் என்று வந்தவனை, சில பாடல்கள் இப்படி வருகிறது. என் முதல் படம் பாண்டவர் பூமி. அதில் முதல் பாடலுக்கு அரசு விருது வாங்கிய கவிஞன் என்று பெருமையுடன் கூறியவர்.

ஏன் ஒரு நல்ல விஷயங்களை இந்த சமூகம் எடுத்து கொண்டாட மறுக்கிறது என்ற வருத்தம் படைப்பாளனாக எனக்கு இருக்கிறது. சில நேரங்களில் சில விஷயங்களைப் பேச வேண்டியதாக இருக்கிறது.‌ மரியாதை இல்லாத தலைப்பு என்று ராஜன் சொன்னார்.

காதல் மரியாதை எதிர்பார்ப்பது இல்லை. எதிர்பார்த்தால் அது காதலும் இல்லை. காதலுக்கு வெற்றி, தோல்வி எதுவுமே இல்லை. அது வாழ்ந்து கொண்டே இருக்கும். அதை கொண்டாடத் தெரியாதவன் சபிக்கப்பட்டவன். காதல் காதலாகவே இருக்கிறது. எல்லா நட்புக்குள்ளும் காதல் இருக்கிறது. மனிதம் காதலைக் கொண்டாட மறுக்கிறது” என்று பேசினார்.

இதையும் படிங்க:மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்.. சீமான் பங்கேற்பு!

Last Updated : Feb 8, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details